Monday, October 8, 2018

நாச்சியார் திருமொழி 1.10 - nAchiyAr tirumozhi 1.10

பாடல் 10

கருப்புவில் மலர்க்கணைக் காமவேளைக்
..கழலிணை பணிந்து, அங்கோர் கரியலற
மருப்பினை ஒசித்துப் புள்வாய் பிளந்த
..மணிவண்ணற்கு என்னை வகுத்திடு என்று
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும்
..புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை
விருப்புடை இன்தமிழ் மாலை வல்லார்
..விண்ணவர் கோன் அடி நண்ணுவரே

கரும்பு வில், மலர் அம்புகள் கொண்ட மன்மதனின் கால்களைத் தொழுது, குவலயாபீடம் என்னும் யானை ஓலமிட, அதன் தந்தத்தை ஒடித்தவனும், பக்காசுரன் என்னும் கொக்கின் வடிவில் வந்த அசுரனின் வாயைப் பிளந்து, அனைவரையும் காத்தவனுமான மணிவண்ணனுக்கு என்னை சேர்பித்துவிடு என்று, ஆசையுடன் இனிய தமிழ் மாலையை, பெரிய மாடங்கள் பொலிவுடன் தோன்றும் புதுவை என்னும் வில்லிபுத்தூர் நகரின் மன்னன் விஷ்ணுசித்தன் (விட்டுசித்தன்) அவரது மகள் கோதையாகிய நான் சொன்னேன். இந்த மாலையை சொல்பவர்கள், தேவர்களுக்கெல்லாம் தலைவனான எம்பெருமான் நாராயணனின் திருவடிகளுக்கு அருகில் செல்வார்கள்.

Song 10

karuppuvil malarkkaNai kaamavELaik
..kazhaliNai paNindhu, angOr kari alaRa
maruppinai ositthu puL vaai piLandha
..maNivaNNaRku ennai vagutthidu endRu
poruppanna maadam polindhu thOndrum
..pudhuvaiyar kOn vittuchitthan kOdhai
viruppudai in thamizh maalai vallaar
..viNNavar kOn adi naNNuvarE

These songs in Tamil are sung by Kothai, who is the daughter of Vishnu chitthan (Periyazhwar), the king of Srivilliputtoor (pudhuvai), that has lot of huge and beautiful buildings. These songs are on Manmadhan, who holds a bow made of sugarcane and arrows made of flowers. The aim behind these songs are to request Manmadhan to help us to reach the abode of Narayana who killed the elephant (kuvalayaapeedam) by breaking it's tusk and who killed the asura in the form of a crane (bakkaasuran) by opening it's mouth widely. Those who chant these songs will get closer to the lotus feet of Narayana, the lord of Deva's (celestials).

Sunday, October 7, 2018

நாச்சியார் திருமொழி 1.9 - nAchiyAr tirumozhi 1.9

பாடல் 9

தொழுது முப்போதும் உன் அடிவணங்கித்
..தூமலர் தூய்த்தொழுது ஏத்துகின்றேன்
பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே
..பணிசெய்து வாழப் பெறாவிடில் நான்
அழுதழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும்
..அதுவுனக்கு உறைக்கும் கண்டாய்
உழுவதோர் எருத்தினை நுகங்கொடுபாய்ந்து
..ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே

மன்மதனே, உன்னையே மூன்று வேளையும் தொழுது, உன்புகழ் பாடி, மலர்தூவி பணிகின்றேன். எதற்காக என்றால், நான் எப்போதும், பாற்கடல் வண்ணனான கண்ணனுக்கே எவ்வித குறையும் இன்றி கைங்கர்யம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால், அழுது அழுது தடுமாறி 'அம்மா' என்று கதறி விழுந்துவிடுவேன் என்பது உனக்கும் தெரியும். அப்படி என்னை விழச்செய்வது, வயலில் உழுது கொண்டிருக்கும், எருதினுக்கு, உணவு அளிக்காமல் கொடுமை படுத்துவது போல் ஆகும்.

Song 9

thozhuthu muppothum un adi vaNangith
..thoomalar thooitthozhuthu yEtthukindREn
pazhuthu indRip paaRkadal vaNNanukkE
..paNiseithu vaazhap peRaavidil naan
azhuthu azhuthu alamandhu ammA vazhanga aatRavum
..athu unakku uRaikkum kaNdaai
uzhuvathOr erutthinai nugam kodu paaindhu
..oottamindRi thurandhaal okkumE

Oh manmadha, I am praying to your feet three times a day and I am offering flowers to you and singing your fame. I should get an opportunity to serve the lord who resides in the milky ocean, without any problem. If I am unable to serve Him, you know very well about my fate. I will keep crying for ever and will sink. If you make me to fall, it is like torturing a bull without giving any food, that keeps on working on the field for its master always.

Saturday, October 6, 2018

நாச்சியார் திருமொழி 1.8 - nAchiyAr tirumozhi 1.8

பாடல் 8

மாசுடை உடம்பொடு தலை உலறி
..வாய்ப்புரம் வெளுத்து ஒரு போதும் உண்டு
தேசுடைத் திறலுடைக் காமதேவா
..நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவது ஒன்று உண்டு இங்கு எம்பெருமான்
..பெண்மையைத் தலையுடைத்து ஆக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால்பிடிப்பாள்
..என்னும் இப்பேறு எனக்கு அருளுகண்டாய்

இந்தப் பாடலில், ஆண்டாள், தான் எவ்வாறு நோன்பினை மேற்கொள்கிறாள் என்றும், அதன் குறிக்கோள் என்ன என்றும் தெரிவிக்கிறாள்.

எவ்வாறு?

பல நாட்களாக இருக்கும் இடத்தை விட்டு நகரவில்லை. அதனால் உடல் மாசு அடைந்திருக்கிறது. தலைக்கு எண்ணெய் தடவ வில்லை. ஆதலால், அவை காய்ந்து காணப்படுகிறது. ஒரு வேளை மட்டுமே உணவு உண்கிறோம். தாம்பூலம் உட்கொள்ளவில்லை.

தேசு, திறல் - அழகும், பராக்ரமமும் உடைய மன்மதனே, நான் உன்னை நோக்கி இவ்வாறு நோற்கின்ற இந்த கடினமான நோன்பின் குறிக்கோள் ஒன்று உள்ளது. அதைத் தெரிந்துக்கொள். எனது பெண்மையைச் சிறந்ததாக ஆக்கும் வண்ணம், "எம்பெருமானான கேசவனின் கால்களைப் பிடிப்பவள் இவள்" என்ற பெரும் பேறு எனக்கு நீ அருள வேண்டும்.

Song 8

maasudai udambodu thalai ulaRi
..vaaippuram veLutthu, oru pOthum uNdu
thEsudai thiRaludai kAmadEvaa
..nORkindRa nOnbinaik kurikkoL kaNdaai
pEsuvathu ondru undu ingu emperumaan
..peNmaiyai thalaiyudaitthu aakkum vaNNam
kEsava nambiyai kaalpidippAl
..ennum ippERu enakku aruLukaNdaai

In this song, Andal says how does she follow the worship and what is the aim in following this worship.

She was sitting in the same place for days together and praying. So, her body becomes covered with dust. She didnt apply oil and comb her hair. It has turned brown. She eats only once a day and didnt have betel leaves. So her lips have turned pale. She sacrifices all these and prays to Manmadha only to get a blessing.

What is that blessing?

To make her birth as a woman, more meaningful, she should get a name that, she is the one who holds the feet of her lord Kesava. To get this opportunity, she is withstanding all the torments by observing the worship by fasting.

Friday, October 5, 2018

நாச்சியார் திருமொழி 1.7 - nAchiyAr tirumozhi 1.7

பாடல் 7

காயுடை நெல்லொடு கரும்பு அமைத்துக்
..கட்டி அரிசி அவல் அமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
..மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேய முன் அளந்தவன் திரிவிக்கிரமன்
..திருக்கைகளால் என்னைத் தீண்டும்வண்ணம்
சாயுடை வயிறும் என் தடமுலையும்
..தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே

மன்மதனே, காய்கள் காணப்படுகின்ற பசுமையான நெல், கரும்பு, கரும்புக்கட்டி (வெல்லம்), அரிசி, அவல் இவற்றைக் கொண்டு சுவையான பதார்த்தத்தைச் சமைத்து,  உனக்குப் படைத்து, நல்ல வாக்குடைய வேதம் ஓதும் அந்தணர்கள் மந்திரம் சொல்ல,  உன்னை வணங்குகின்றேன். தேய என்றால் உலகம். தேசம் என்பதை தேயம் என்றும் கூறுவார். உலகை முன்பொருநாள் அளந்தவனான திரிவிக்ரமன் தன் திருக்கைகளால் எனது ஒளியுடைய (சாயை என்றல் ஒளி; மரகத சாயே என்று மீனாட்சியை ஸ்ரீ தீட்சிதர் பாடுவார்) வயிற்றையும், மென்மையான பருத்த முலைகளையும் தீண்டும் வண்ணம் நீ செய்ய வேண்டும். அவ்வாறு செய்து, எனக்கு அப்பேறு கிட்டினால், இவ்வுலகில் நான் மிகுந்த புகழோடு இருப்பேன்.

Song 7

kaayudai nellodu karumbu amaitthu
..katti arisi aval amaitthu
vaayudai maRaiyavar mandhiratthaal
..manmadhanE unnai vaNangugindREn
thEya mun aLandhavan thirivikkiraman
..thirukkaigaLaal ennaith theeNdum vaNNam
chaayudai vayiRum en thadamulaiyum
..tharaNiyil thalippugazh tharakkitRiyE

Oh Manmadha, I prepared a dish made out of fresh paddy (kaai udai nel), sugarcane (karumbu), jaggery (karumbu katti - sugarcane cubes), rice (arisi), rice flakes (aval) and offered it to you along with the mantras (manthiratthaal) chanted by vedic scholars. You need to make lord Trivikrama who measured (mun aLandhavan) the whole world (thEyam = thEsam) with his feet, to embrace (theendum vannam) my stomach (vayiru) and breasts (thada mulai) with His hands (thirukkaigaLaal) and accept me. If this happens, then I will live in this world with never evading fame.

Tuesday, October 2, 2018

நாச்சியார் திருமொழி 1.6 - nAchiyAr tirumozhi 1.6

பாடல் 6

உருவுடையார் இளையார்கள் நல்லார்
..ஓத்துவல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர்கொண்டு பங்குனிநாள்
..திருந்தவே நோற்கின்றேன் காமதேவா
கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன்
..கருவிளை போல்வண்ணன் கமலவண்ணத்
திருவுடை முகத்தினில் திருக்கண்களால்
..திருந்தவே நோக்கு எனக்கு அருளுகண்டய்

காமதேவனே,

1. உருவுடையார் - அழகிய உருவம் உடையவர்கள்,
2. இளையார்கள் - இளமையாக இருப்பவர்கள்,
3. நல்லார் - நல்லவர்கள்,
4. ஓத்துவல்லார்கள் - சாத்திரங்களில் (ஓத்து) வல்லுனர்கள்

இவர்களின் துணைகொண்டு, பங்குனி மாதத்தில் உள்ள நல்ல நாளில் (பங்குனி நாள்), விடியற்காலையில் (வைகல்) , நீ இருக்கும் இடத்தில் வந்து (தெருவிடை எதிர்கொண்டு), உன்னை வணங்குகின்றேன் (நோற்கின்றேன் காமதேவா). எதற்காக என்றால்,

1. கரிய உடை அணிந்தது போல் உள்ள மேகம் (தன்னிடத்தே நீர்கொண்ட மேகம்) போன்ற வண்ணம் உடையவனும்,
2. காயாம்பூ போன்றவனும்,
3. கருவிளை என்னும் காக்கணப்பூ போன்ற வண்ணம் உடையவனுமான

அந்தக் கண்ணன், அவனது தாமரைப் போன்ற முகத்தில் உள்ள திருக்கண்களால் என்னை நோக்க வேண்டும் என்பதற்காக.

Song 6

uruvudaiyaar iLaiyaargaL nallaar
..Otthu vallaargaLaik konNdu vaigal
theruvidai ethirkoNdu panguni naaL
..thirundhavE nORkindREn kAmadEvA
karuvudai mugil vaNNan, kaayaa vaNNan
..karuviLai pOl vaNNan, kamala vaNNa
thiruvudai mugatthinil thirukkaNgaLaal
..thirundhavE nOkku enakku aruLu kaNdAi

Kamadeva, with the help of these 4 persons (persons with beauty, youth, good heart, expert in shaastraas) on the early morning hours (vaigal) of an auspicious day in the month of panguni, I came to the place where you reside and offer my worship to you. Why?

To make eyes on the lotus like face (kamala vanna thiruvudai mugatthinil thirukkaNgaL) of the lord who is as black as the dark clouds containing water in it (karuvudai mugil vannan), as black as kaayaam flower (kaayaa vannan), karuviLai flower  (karuvilai pOl vannan) fall on me (thirundhavE nokku enakku aruL).

Sunday, September 30, 2018

நாச்சியார் திருமொழி 1.5 - nAchiyAr tirumozhi 1.5

பாடல் 5

வானிடை வாழும் அவ்வானவர்க்கு
..மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து
..கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று
..உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடவர்க்கு என்று பேச்சுப்படில்
..வாழகில்லேன் கண்டாய் மன்மதனே

ஆண்டாளின் தீவிர பக்தி இந்தப் பாட்டில் தெரிகிறது. வானுலகில் வாழும் தேவர்களுக்கென்று, அந்தணர்கள் செய்து வைத்த அவிசு ஆனதை, காட்டில் திரியும் நரியானது, யாகம் செய்யும் இடத்தில் புகுந்து, முகர்ந்து பார்ப்பது போல, தன் விஷயத்தில், கையில் சங்கு சக்கரம் வைத்துள்ள உத்தமனுக்கு என்று வளர்ந்த மார்பகத்தை, மானிடர் எவருக்கேனும் என்று யாராவது பேசினார்கள் என்றால் (அதாவது தன்னை நாரணனுக்கு அல்லாது மற்ற எவருக்கேனும் மனம் முடித்துக் கொடுத்தால்) அந்த நொடியிலேயே அவள் உயிர் அவளை விட்டுச் சென்றுவிடும் என்கிறாள்.

Song 5

vaanidai vaazhum avvaanavarkku
..maraiyavar veLviyil vaguttha avi
kaanidaith thirivathor nari pugundhu
..kadappathum mOppathum seivathu oppa
oonidai aazhi sangu utthamarkkendru
..unnitthu ezhundha en thada mulaigal
maanidavarkku endru pecchuppadil
..vaazhagillen kandaai manmadhane

This song shows the staunch devotion of Andaal to Krishna. The brahmins, performing yagna, would have kept their offerings to the celestial beings. A fox will come from the forest and would smell it and sometime eat it. This should not happen in her case. That is she has made up her mind to get united with the Lord, who is holding a conch and a disc in His hands. If someone talks of getting her married to someone else, that very moment her life will not be with her.

Saturday, September 29, 2018

நாச்சியார் திருமொழி 1.4 - nAchiyAr tirumozhi 1.4

பாடல் 4

சுவரில் புராண!  நின் பேர் எழுதிச்
..சுறவ நற்கொடிகளும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்புவில்லும்
..காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா
அவரைப் பிராயந் தொடங்கி என்றும்
..ஆதரித்து எழுந்த என் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே

காமதேவனே, சுவற்றில் புராணனான (பல காலமாக இருந்துவருபவன் - புராணன்) உன் பெயரை எழுதி வைத்தேன். உனது கொடியான சுறா மீன் கொடிகளையும், உன் வாகனமான குதிரைகளையும் (துரங்கங்கள்) , சாமரம் வீசும் பெண்களையும் (கவரிப் பிணாக்கள்), கரும்பு வில்லையும் உனக்குக் காட்டிக்கொடுத்தேன். என் இளமைப் பிராயம் தொட்டே, கண்ணபிரானையே (துவரைப் பிரானுக்கே) நினைத்து வளர்ந்து வந்தேன். அவ்வாறே என் முலைகளை அந்தக் கண்ணனுக்கே என்று சங்கல்பம் செய்துகொண்டேன். விரைவில் எனது ஆசைகளை (கண்ணனை அடைய வேண்டும்) நிறைவேற்றித் தரவேண்டும்.

Song 4

suvaril purANa nin pEr ezhuthi
..suRava narkodigalum thurangangalum
kavari pinaakkalum karuppu villum
..kaattith thandhen kandaai kamadeva
avarai piraayam thodangi endrum
..aadharitthu ezhundha en thadamulaigal
thuvarai piraanukke sangarpitthu
..thozhuthu vaitthen ollai vithikkitriye

Oh Kamadeva,

I wrote your name on the walls.
I showed you the flag with whale on it, horses, maids waving the fans and the bow made of sugarcane.

From very early age, I grew up thinking of Lord Krishna, the King of Dwaraka and took an oath that the breasts of mine are only for Him. so please make my wish come true.

Friday, September 28, 2018

நாச்சியார் திருமொழி 1.3 - nAchiyAr tirumozhi 1.3

பாடல் 3

மத்த நன்னறுமலர் முருக்கமலர்
..கொண்டு முப்போதும் உன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து
..வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக்கொண்டு
..கோவிந்தன் என்பதோர் பேரேழுதி
வித்தகன் வேங்கடவாணன் என்னும்
..விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே

மத்த - ஊமத்த மலர். நல்ல வாசம் உள்ள ஊமத்த மலர், முருக்க மலர் இவற்றைக் கொண்டு, மூன்று காலமும் மன்மதனே உன் அடியை வணங்குகின்றேன். தத்துவம் இல்லாதவன் நீ என்று உன்னை நான் வசைப்பாடா வண்ணம் நீ ஒன்று செய்ய வேண்டும். என்னவென்றால், உன் கையில் இருக்கும் மலர்க்கணைகளைத் தொடுத்து, அவற்றில் கோவிந்தன் என்னும் பெயர் எழுதி, அனைத்தும் அறிந்த வித்தகன் வேங்கட மாமலை தன்னில் உள்ள பிரகாசமான எம்பெருமானிடத்தில் நான் புகுமாறு செய்வதேயாகும்.

Song 3

mattha nan narumalar murukka malar
..kondu muppothum un adi vaNangi
thatthuvamili endru nenjerindhu
..vaasagatthu azhitthu unnai vaithidaame
kotthalar poongaNai thodutthukkondu
..govindhan enbathOr per ezhuthi
vitthagan venkata vaaNan ennum
..viLakkinil puga ennai vithikkitriye

Oh Manmadha, I am offering sweet smelling oomattham and murukkam flowers to you. Please do me a favour. If not, I will curse you saying you are a traitor who doesnot know values. Please write the name 'Govindha' on the arrows made of flowers with you and shoot it in such a way that, I could reach the radiant lamp, residing in Tirumalai, who is an adept in everything.

Thursday, September 27, 2018

நாச்சியார் திருமொழி 1.2 - nAchiyAr tirumozhi 1.2

பாடல் 2

வெள்ளை நுண்மணல் கொண்டு தெருவணிந்து
..வெள்வரைப்பதன் முன்னம் துறைபடிந்து
முள்ளும் இல்லாச் சுள்ளி எரிமடுத்து
..முயன்றுன்னை நோற்கின்றேன் காமதேவா
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக்கொண்டு
..கடல்வண்ணன் என்பதோர் பேரெழுதி
புள்ளினை வாய்பிளந்தான் என்பதோர்
..இலக்கினில் புக என்னை எய்கிற்றியே

மன்மதனே, நீ இருக்கும் தெருவினை (இடத்தினை - அதாவது நம் மனது), நன்றாக சலிக்கப்பட்ட வெள்ளை நிற மணல் கொண்டு அலங்கரித்தேன். பின்னர் சூரியன் உதயத்திற்கு முன்னமே, குளத்தில் நீராடி முடித்துவிட்டேன். முட்கள் இல்லாத சுள்ளிகளை எடுத்து, தீயில் இட்டேன் [தீய எண்ணங்கள் முட்கள். அந்த முட்களை நீக்கி, நம் எண்ணமாகிய சுள்ளியை, ஆஹுதியில் இடுதல். இறைவனை அடைய யாகம் பண்ணுவது பற்றி கூறுகிறாள்].

இவ்வாறெல்லாம் ஏன் செய்கிறேன் என்றால், உனது மலர்க்கணைகளில் (மன்மதனின் பஞ்ச பாணம் - அம்பாள் கையிலும் அதே அம்புகள் தான் இருக்கின்றன) "கடல் வண்ணன்" என்று பேர் எழுதி, அந்தப் புள்ளின் வாய் பிளந்த பரமனின் மேல் விடுவாயாக.

அதாவது, தன்னையே மலர் அம்பாக வைத்து, தன் மேல், கடல் வண்ணன் என்று பெருமாளின் நாமத்தை எழுதி, அவனை நோக்கி விடுமாறு, ஆண்டாள் காமதேவனைப் பிரார்த்திக்கிறாள்.

வெள்வரைப்பதன் முன்னம் என்றால், சூரியன் உதிப்பதற்கு முன்னமே என்று பொருள்.

பஞ்சதன்மாத்ர சாயகா என்று லலிதா சஹஸ்ரநாமம் வர்ணிக்கிறது. பஞ்சபாணி என்று ஒரு பெயர் உண்டு. சிவபெருமான், மன்மதனை எரித்த போது, அம்பாள், அவனது கரும்பு வில்லையும், மலர்க்கணையையும் தாம் எடுத்து வைத்துக்கொண்டாள் என்று கூறுவார்கள். மனோ ரூப இக்ஷு கோதண்டா, அதாவது நம் மனம் என்னும் கரும்பு வில்லையும், நமது உணர்வுகள் என்னும் அம்புகளையும் அம்பாளிடம் கொடுத்துவிட்டால், அவை நல்ல வழியில் இயங்கும் என்ற உள்ளர்த்தம். அதுபோல, இங்கே, ஆண்டாள், மன்மதனிடம் வேண்டுவது, நாராயணன் மேல் நம்மைச் செலுத்துக என்பதாகும்.

Song 2

veLLai nuN maNal koNdu theruvaNindhu
..veL varaippathan munnam thuRaipadindhu
muLLum illaach chuLLi erimadutthu
..muyandRunnai nORkindREn kAmadEvA
kaLLavizh poongaNai thodutthukkoNdu
..kadal vaNNan enbathOr pErezhuthi
puLLinai vaai piLandhaan enbathOr
..ilakkinil puga ennai eigitRiyE

Kamadeva, I decorated the place where you reside with white sand that is very fine. I removed the thorns from the twigs. I bathed before sun rise (veL varaippathan munnam thuRai padindhu) in the pond. I am offering the twigs in the sacred fire for you. Why am I doing all these? It is because, I want you to write the name of the lord who is in the colour of the ocean (Kadal vannan) on your arrows with myself tied to it and shoot it on him (ilakkinil puga), the one who killed the asura who came in the form of a crane (puLLinai vaai piLandhaan).

In Lalitha Sahsranama there are two namas - manO roopa ikshu kOdhandA, pancha thanmaatra saayaka. Manmadhan has a bow made of sugarcane (ikshu) and five arrows made of flowers. When he disturbed Lord Shiva when he was doing penace, he was burnt to ashes. Parvati took Manmadhan's weapons and had it with her. The bow symbolises our mind and the five arrows are our five senses. When they are with Devi, it will do only the right thing. If not, they will wander somewhere and keep doing wrong. This is the inner meaning of Ambal holding manmadhan's weapons.

Wednesday, September 26, 2018

நாச்சியார் திருமொழி 1.1 - nAchiyAr tirumozhi 1.1

திருமொழி 1

பாடல் 1

தையொரு திங்களும் தரைவிளக்கித்
..தண் மண்டலமிட்டு மாசிமுன்னாள்
ஐய! நுண்மணல் கொண்டு தெருவணிந்து
..அழகினுக்கு அலங்கரித்து அனங்கதேவா
உய்யவுமாங் கொலோ என்று சொல்லி
..உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
..வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே.

மார்கழி மாதத்தில் நோன்பு இருந்து, கண்ணனின் அருளைப் பெற்ற ஆண்டாள், தை மாதம் பிறந்து விட்டது, இன்னும் கண்ணன் நேரே வரவில்லையே என வருந்தி, மன்மதனைத் துணைக்கு அழைக்கிறாள். பிரிந்தோரைச் சேர்த்துவைக்கும் வல்லமை உடைய மன்மதனே, நான் வாழவேண்டும் என்று எண்ணி, உன்னையும், உன் தம்பியான சாமனையும் தொழுதேன். தை மாதம் முழுவதும், நீ எங்கெல்லாம் இருப்பாய் என்று பரிசோதனை செய்துவிட்டு, மாசி மாதத்தின் முதலில் அந்த இடங்களை சுத்தம் செய்து, அலங்கரித்து வணங்குகின்றேன். எதற்காக? நெருப்பினை உமிழக்கூடிய சக்கரத்தைத் தன் கையில் வைத்திருக்கும் திருவேங்கடமுடையானிடம் என்னை நீ சேர்ப்பிக்க வேண்டும் என்பதற்காக.

கண்ணனுக்கும் ருக்மிணிக்கும் பிறந்தவன் பிரத்யும்னன் (மன்மதனின் அம்சம்). கண்ணனுக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்தவன் சாம்பன். சாமன் எனவும் கூறுவார். தலைவனான கண்ணனை அடையவேண்டும் என்றால் அவனது புதல்வர்களை முதலில் அணுகவேண்டும் அல்லவா!

மன்மதன் - பிரும்மத்தின் மனத்திலிருந்து தோன்றியவன். மன்மதனை வணங்குதல் என்பது, நம் மனதினை வணங்குவதாகும். நம்மை இறைவனுக்கு உரித்தாக்க வேண்டும் என்றால், நம் மனத்தைத் தானே முதலில் சரிபடுத்த வேண்டும். அதனால் மன்மதனே என்று ஆண்டாள் பாடுவது, அவள் மனத்தையே. உலக விஷயங்களில் தொலைந்துபோன மனத்தினைத் தேடிக் கண்டுபிடித்து, அதனை சுத்தமாக்கி, இறைவனை அடைய தனக்கு உதவுவாயாக என்று பணிகிறாள்.

காமனையும் சாமானையும் வணங்குவதற்கான இன்னொரு காரணம்: காமன் - காமத்தின் வடிவம் (ஆசை). சாமன் - குரோதத்தின் (கோபம்) வடிவம். நாம் இறைவனை நோக்கிச் செய்யும் பயணத்தில் தடையாக இருப்பவர்கள் காமம், குரோதம் முதலிய ஆறு துர்குணங்கள். லோபம், மோஹம், மதம், மாத்சர்யம் ஆகிய மற்ற நான்கும், இந்த காம, குரோதத்திலிருந்து தோன்றுபவையே. ஆதலால், காமத்தையும், குரோதத்தையும் வணங்கி, இறைவனை நாம் அடைவதற்கு, தடை விதிக்காதவாறு வேண்டுவதே.

Thirumozhi 1

Song 1

thaiyoru thingaLum thari viLakkith
..thaN maNdalam ittu, maasi munnaaL
ayya! nuN maNal koNdu theruvaNindhu
..azhaginukku alangaritthu ananga dEvA!
uyyavum aankolO endru solli
..unnaiyum umbiyaiyum thozhuthen
veyyathor thazhal umizh chakkarakkai
..vEnkatavarkku ennai vithikkitriye

Andal completed the paavai nOnbu in Margazhi successfully. But still, she could not see Krishna coming to take her with Him. So, she sings to Ananga dEva (Manmadhan or Kamadevan). She describes Manmadhan as the one who could unite the people together with Love, please help me to reach the lord of Tiruvenkadam who has a disc that emits fire, in his hand. She spent the full month of  thai searching for the places where Manmadhan will reside and in the first half of the next month Maasi, she decorated the place of his residence and worshipped him (Kaaman) and his brother Saaman to help her to unite with Sri man Narayana.

Pradyumnan (an amsam of Manmadhan) was born to Krishna and Rukmini. Saamban or saaman was born to Krishna and Jambavathi. To reach a lord, we need to appeal to His sons right!

Another aspect - Manmadhan was borne from the Supreme's mind. Praying to manmadhan is same as praying to our own mind. To offer ourselves to the Lord, our mind should be tuned first right? So Andal singing Manmadhane, is that, she is addressing her own mind. She is searching for her mind which was lost somewhere in this worldly pleasure and then found it at last. Then she clenses it (decorate) and asks it to unite her with the lord.

Andal Praying to Kaman and his brother Saman - another interpretation. Kaman represents desire and Saman represents anger. Desire and anger are the root cause of all problems. All though there are six ill senses in total - kamam, krodham, lobam, moham, madham and matsaryam, the last 4, viz., lobam, moham, madham and matsaryam are all extensions of kamam and krodham. So, Andal prays to desire and anger to help her to reach God by not intervening in her journey.

Tuesday, September 25, 2018

நாச்சியார் திருமொழி - ஒரு அறிமுகம் - nAchiyAr thirumozhi - An Introduction

நாச்சியார் திருமொழி

திருப்பாவையில் பாவை நோன்பு மேற்கொண்ட, ஆண்டாள், நாச்சியார் திருமொழியில் பல வகைப் பாடல்களைப் பாடி, கண்ணபிரானை அடைய வழி வகுக்கிறாள். அந்தந்தத் திருமொழியின் போது விரிவாக பார்ப்போம். சுருக்கமாக பதினான்கு திருமொழிகளிலும் என்ன பாடியிருக்கிறாள் என்பதை இப்போது பார்க்கலாம்.

1. மன்மதனை வேண்டி, திருமாலோடு தன்னைச் சேர்க்க வேண்டும் என்று பாடுகிறாள்.
2. ஆயர் சிறுமியர் போல தன்னை நினைத்துக்கொண்டு, அந்தக் கண்ணனின் விளையாடல்களைப் பாடுகிறாள். சிற்றில்லைச் சிதைக்க வேண்டாம் என்று பாடுகிறாள். (சிற்றில் என்பது சிறு இல் - மண்ணில் குழந்தைகள் கட்டி விளையாடுவது)
3. ஆடைகளைத் திருப்பிக்கொடு என்று கண்ணனிடம் பாடுகிறாள்.
4. ஆய்ச்சிமார்களின் வாயால், அவர்கள் கண்ணனோடு செய்த ஊடல், கூடல், புணர்தல் போன்ற அனுபவத்தைப் பாடுகிறாள்.
5. "பவளவாயன் வந்தால் எனக்குத் தெரிவிப்பாய்" என்று குயிலுக்குக் கட்டளை இடுகிறாள்.
6. கண்ணபிரானைக் கைபிடிப்பது போல் கனவு கண்டு, அதனைப் பற்றி பாடுகிறாள்.
7. திருமாலின் கையில் இருக்கும் பாஞ்சஜன்யத்தைப் புகழ்ந்து பாடுகிறாள். சங்குகளுள் தலைசிறந்தவன் நீ. நீ பெற்ற பாக்கியம் எனக்கும் கிடைக்குமா என்று ஏங்குகிறாள்.
8. மேகங்களிடம் தூது விட்டு, செய்தியைக் கண்ணனுக்குத் தெரியப்படுத்துக என்கிறாள்.
9. திருமாலிருஞ்சோலை அழகன் மேல் பாடலைப் பாடி, தனது ஆசையைத் தெரிவிக்கிறாள். தான், இவையெல்லாம் தருகிறேன் என்று பட்டியல் போடுகிறாள்.
10. தன் தந்தையான பெரியாழ்வார் சொன்னால், ஒருவேளை வருவீரோ என்று திருமாலையே கேட்கிறாள்.
11. திருவரங்கநாதனைப் பார்த்துப் பாடுகிறாள்.
12. மதுரைப்பதி முதல் துவாரகை வரை கண்ணனின் லீலைகள் கலந்த ஊர்களைப் பற்றிப் பாடி, தன்னை அங்கு கொண்டு விட்டால், பிழைத்துக்கொள்வேன் என்கிறாள்.
13. கண்ணனோடு சம்பந்தப்பட்டவைகளான அவனது ஆடை, குழல், மாலை, அவனது கால் தூசி போன்றவையாவது தனக்குக் கிடைக்க வேண்டும் என்று வேண்டுகிறாள்.
14. இறுதியில், பிருந்தாவனத்தில் கண்ணனைக் கண்ட காட்சிகளைப் பாடுகிறாள். கண்ணன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதை மிக அழகாகப் பாடி, நிறைவு செய்கிறாள்.

nAchiyAr thirumozhi

In tiruppaavai, Andal sings the glory of Sri Narayana and got the drums etc. Now in Nachiyar thirumozhi, she sings under different circumstances, putting herself in different roles and gives a varied experience. In all the songs, her aim is to become one with Krishna. We will see in detail when coming to the respective thirumozhi. Just giving a gist of what has been sung in each tirumozhi.

1. She offers her prayers to Manmadhan and asks him to help her to reach Krishna.
2. She considers herself as the girl of Ayarpadi and sings about Krishna's pranks with them. She asks Him not to destroy the mud houses constructed by them on the streets.
3. Gopika vastraaharaNam is explained here. She pleads Krishna to give back the clothes.
4. She considers herself as one among the women of Ayarpadi who underwent different kinds of experiences with Krishna and sings the same.
5. She asks the nightingale to signal her on seeing the arrival of lord Krishna.
6. She had a dream that Krishna marries her and tells the various events happening in the wedding.
7. She praises the conch in the hand of Vishnu and asks it if she too can get a place like it.
8. She sends the clouds as a messenger and asks them to convey her messages to the Lord.
9. She sings to the lord of Tirumalirumcholai and offers him the sweet dishes etc.
10. She asks the  lord that will he come only if her father Sri Periyazhwar asks him to come.
11. She sings to the lord of Srirangam and conveys her feelings.
12. She describes the various places from Mathura to Dwaraka that had the diving experience of Krishna from His birth to his ascend to the throne.
13. She asks to each of Krishna's belonging like His silk dhoti, flute, garland or his foot dust if they can come to her.
14. She reaches Brindavan and sees Krishna and all his activities and narrates it.

Monday, September 10, 2018

திருப்பாவை பாடல் 30 - Tiruppaavai Song 30

கோதைமொழி கோலமொழி - 30

30.
வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்
கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பலஸ்துதியாக அமைந்த நிறைவுப் பாடல். இப்பாடல்களைப் படிப்போர் பெறும் பேறு என்ன என்பதை ஆண்டாள் கூறுகிறாள்.

கப்பல்கள் நிறைய பயணிக்கும் கடலினைக் கடைந்த பெருமானான (மாதவன், கேசவன்) கண்ணனை, நிலவு போன்ற முகப்பொலிவுடைய பெண்கள் (திங்கள் திருமுகத்துச் சேயிழையார்) அவனிடம் சென்று (அங்கு சென்று இறைஞ்சி), கேட்டுப் பறையைப் பெற்றுக்கொண்ட வழியை (அப் பறைகொண்ட ஆற்றை ஆறு - வழி), அழகிய புதுவை (வில்லிபுத்தூர்) நகரில் உள்ளவரும், குளிர்ந்த தாமரை மலர் மாலையை அணிந்தவருமான (பைங்கமலத் தண் தெரியல்) விஷ்ணுசித்தர் (பட்டர்பிரான்) அவரின் மகளான கோதை சொன்ன இந்தச் சங்கத் தமிழ் மாலை முப்பது பாட்டினையும் விடாது (தப்பாமே = தப்பாமல்) எந்நாளும் பாடுபவர் பெறும் பேறு என்ன?

மால் வரைத் தோள் ஈரிரண்டு (2 * 2 = நான்கு) நான்கு பெரிய தோள்கள் [மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன் அல்லவா அவன்!] உடையவனும், அழகிய முகத்தில் சிவந்த தாமரையைப் போன்ற கண்கள் உடையவனுமான திருமாலால் எங்கும் என்றும் எப்போதும் திருவருள் கிடைக்கப்பெற்று இன்பமாய் இருப்பார்கள்.

மாதவன், கேசவன் என்று இரண்டு நாமங்களை ஏன் கூறுகிறாள்? வங்கக் கடல் கடைந்த திருமால் என்று சொன்னால் போதாதா? கடலைக் கடைவதற்கு, கூர்மாவதாரம் எடுத்து, மலை மூழ்காமல் காத்தவனும் அவனே. தேவாசுரர்கள் கடைய அவர்களுக்கு உதவியவனும் அவனே. அதனால் இரண்டு முறை கூறுகிறாள்.

சங்கத் தமிழ் மாலை என்றால் - கூட்டமாக, பெண்கள் யாவரும் கண்ணனிடம் சென்று பிரார்த்திக்கிறார்கள். சங்கம் என்றால் கூட்டம். தனியாக பிரார்த்திக்கவில்லை. கூடி இருந்து குளிர்ந்தமையால், சங்கத் தமிழ் மாலை.

பெருமாள் இருக்கும் இடமே பிராட்டி இருக்கும் இடம். பிராட்டி இருக்கும் இடமே பெருமாள் இருக்கும் இடம். திருமாலின் திருமார்பில் உறைபவளான இலக்குமி தேவி, எல்லா சௌபாக்கியங்களையும் நமக்கு அருள்வாள்.

kOthaimozhi kOlamozhi - 30

30.
vanga kadal kadaindha maadhavanai kesavanai,
thingaL thirumugatthu sEyizhaiyaar chendru iranji,
anga paRai koNda aatRai - aNipudhuvai
paimkamala thaNtheriyal pattarpirAn kOdhai sonna
sanga thamizh maalai muppathum thappaamE
ingu ipparisu uraippaar eerirandu mAl varai thOL
chengaN thirumugatthu selva thirumAlAl
engum thiruvaruL petRu inbuRuvar empAvAi

The concluding song of Thirupaavai is the phalasthuthi - the outcome that one will get on reciting a sloka. Andal starts this song with amrutha madhanam episode. Vishnu supported the mountain in the form of a tortoise (koormAvataram) that was kept as the churning device to churn the milky ocean (thiruppaarkadal / ksheerabdhi). He gave strength to the dEvas to pull the vAsuki snake to turn the mountain. He himself came out as Dhanvantri with the pot of nectar (amrutha kalasam) in his hands. He himself took the form of Mohini and gave nectar to the devas and hid the same from the asuraas. So Andal says the lord as "vanga kadal kadaindha (churned) mAdhavan, kesavan". Vangam means ship. Lot of ships were seen on the ocean.

The girls who undertook pAvai nOnbu are described as those with beautiful face like moon (thingaL thirumugatthu sEyizhaiyaar). These girls (sEyizhaiyaar - sEy means beautiful, izhai - girl, aar - plural (girls)) went to the lord's (madhavan, kesavan) place (angu [aayarpAdi]), prayed to him (iRainji) for the drums (ap paRai) and eventually got it (koNda). The entire episode narrating the way (aaRu - way; aatRai) to achieve it was told by Andal (kOdhai sonna) by way of 30 tamil poems (sanga thamizh mAlai muppathu).

Andal (kOdhai) describes herself as the daughter of Sri PeriyAzhvar (pattar piraan). Periyazhwar wears a cool garland (thaN theriyal) made of fresh lotus (paim kamalam).

She also describes her place as ANi pudhuvai (villi putthoor - putthoor is pudhiya oor or new town / ever fresh place). Ani pudhuvai means beautiful pudhuvai.

Vishnu (selva thirumAl) is described as the one with four broad shoulders (eerirandu = 2 x 2 = 4; maal varai thOL), the one with red eyes (chengaN) on the handsome face (thirumugatthu).

Those who recites these 30 songs without fail (thappAmE - thappaamal; thappAmE ingu ipparisu uraippar), will be blessed (thiruvaruL petRu) with happieness (inburuvar) by lord vishnu, wherever they go (engum).

lOkAH samsthAH sukhinO bhavanthu!

Sunday, September 9, 2018

திருப்பாவை பாடல் 29 - Tiruppaavai Song 29

கோதைமொழி கோலமொழி - 29

29.
சிற்றம் சிறுகாலே வந்துஉன்னை சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில், என்றும் இறைவன் ஒருவனுக்கே சேவை செய்வோம் என்பதை ஆணித்தரமாக சொல்கிறாள். "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்" என்கிறாள். மற்றவை எதுவுமே வேண்டாம் (மற்றை நம் காமங்கள் மாற்று) என்றும் கூறுகிறாள்.

சிற்றம் சிறு காலே - அதி காலைப் பொழுதில், நாங்கள் யாவரும் வந்து, இறைவனான உன்னை சேவித்து, உன் பொற்றாமரை பதத்தைப் போற்றுகிறோம். இதை எதற்காகச் செய்கிறோம் என்று நீ கேட்பாயாக.

பெற்றம் - மாடு. மாடுகளை மேய்ப்பது, உணவு உண்பது என்று இவற்றைத் தவிர, மற்றெதுவுமே அறியாத ஆயர்குலத்தில் எங்களுக்குப் பெருமை சேர்ப்பதற்காக நீ வந்து பிறந்தாய். எங்களது சிறிய கைங்கர்யத்தை (குற்றேவல் - குறு = ஏவல்) ஏற்று, எங்களுக்கு இன்று பறை முதலியனவற்றை அருளினாய். வெறும் பறைகளை பெருவதற்கா நாங்கள் வந்தோம்? பறையை வாங்கிக்கொண்டு அப்படியே வந்த வழி செல்பவர்கள் அல்ல நாங்கள். என்றென்றும் உன்னோடு மட்டுமே உறவு கொள்வோம். உனக்கு மட்டுமே கைங்கர்யம் செய்வோம். உன் சம்பந்தம் இல்லாத மற்ற விஷயங்கள் எதுவுமே எங்களுக்கு வேண்டாம்.

உன்னைப் பணிந்தவர்களுக்குப் பிறவி என்பதே கிடையாது. அப்படியும் பிறவி(கள்) வந்தாலும், உனக்குக் கைங்கர்யம் செய்யும் பிறவியாக அது அமைய வேண்டும்.

பிறவா வரம் தாரும் இறைவா, பிறந்தாலும் நின் திருவடி மறவா வரம் தாரும் என்னும் பாபநாசம் சிவன் பாடலை நினைவூட்டுகிறது

இவ்வாறு வேண்டுகிறாள்.

ஏழேழ் என்பது - எண்ணற்ற என்னும் பொருளில் கொள்ள வேண்டும். (7*7 அல்ல 7 + 7 அல்ல 7^7 என்றெல்லாம் குழப்பிக்கொள்ள வேண்டாம்)

kOthaimozhi kOlamozhi - 29

29.
chitRanchiRu kAlE vandhunnai sEvitthu un
potRAmarai adiyE pOtRum poruL kElAi
petRam mEitthu uNNum kulatthil piRandhu nee
kutREval engaLai koLLAmal pOgAthu
itRai paRai koLvAn andRukAN gOvindA
etRaikkum yEzh yEzh piRavikkum undhannOdu
utROmE AavOm unakkE nAm aatseivOm
matRai nam kAmangaL mAtRu yEl Or empAvAi

In this song, AndAl says to Krishna: "See, Dear Govinda (kAN Govinda), the objective of  undertaking pAvai nOnbu - coming and worshipping you (vandhu unnai sevitthu) , singing the fame of your lotus feet (un potRamarai adiye potrum poruL), early in the morning (chitranchiru kAle) is not for just getting the drums (itRai paRai koLvAn andRu) and other things like blessings from the Lord in this birth. It is like, even if we get several births (etRaikkum yEzh Yezh piRavikkum) due to our karma, in all those births, we must be with you (lord) [undhannodu utrOm] and we should surrender to you and to you alone [unakke naam aatseivOm].

Please help us to get rid of our mind from being attached to other materialistic matters (matrai nam kaamangal maatru). Please bless us with a mind to think of you alone.

yEzh yEzh should be understood as innumerable. Not as 7 x 7 or 7+7 or something like that.

Saturday, September 8, 2018

திருப்பாவை பாடல் 28 - Tiruppaavai Song 28

கோதைமொழி கோலமொழி - 28

28.
கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்;
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா, உந்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது; அறியாத
பிள்ளைகளோம் அன்பினால் உந்தன்னை
சிறுபேர் அழைத்தனமும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில், எளியவர்களான அடியார்கள் ஏதேனும் தவறாக இதுவரை கூறியிருந்தால், அதைக் கண்டு சினம் கொள்ளாமல், மன்னித்து அருள வேண்டும் என்கிறாள்.

"குறை எதுவும் இல்லாதவன் கோவிந்தன் ஒருவனே. நாமெல்லாம், அறிவு அற்றவர்கள். கறவைகளின் பின்னே சென்று, காட்டில் கூடி உணவு உட்கொள்வோம். அவ்வளவே. அப்படிப்பட்டவர்கள் ஆயினும், எங்களுக்காக, ஆயர்குலத்தில் வந்து கண்ணனே, நீ உதித்தாய். எப்படிப்பட்ட புண்ணியம் நாங்கள் செய்து, உன்னைப் பெற்றோம்!" என்று பெருமை கொள்கிறாள்.

"கண்ணா, உனக்கும் எங்களுக்கும் உள்ள இந்த உறவு, யார் நினைத்தாலும் ஒழிக்க முடியாது. நாங்கள் அறியாப் பிள்ளைகளே. ஏதேனும் தவறாக உன்னை அழைத்திருந்தால், அதைக்கண்டு சீற்றம் கொள்ளாமல், பறையை அருள வேண்டும்" என்கிறாள்.

பகவன் நாமத்தைச் சொல்லவேண்டும் என்று ஆசைக்கொண்டு உச்சரித்தால் போதும். உச்சரிப்புப் பிழை இருந்தாலும், நம் எண்ணம் தூய்மையாக இருப்பதால், இறைவன் மகிழ்வான். குழந்தையின் மழலைச்சொல் கேட்டு, எப்படி, தாய் மகிழ்வாள்! அதுபோலாவே இறைவனும்.

kOthaimozhi kOlamozhi - 28

28.
kaRavaigaL pin sendRu kaanam sErndhu uNbOm
aRivu ondRum illAtha aaikulatthu undhannai
piRavi peRundhanai puNNiyam yaam udaiyOm
kuRai ondRum illAtha gOvindA undhannOdu
uRavEl namakku ingu ozhikka ozhiyAthu
aRiyAtha piLLaigaLOm anbinAl undhannai
siRupEr azhaitthanamum seeRi aruLAdhE
iRaivA nee thArAi paRaiyEl Or emPAvai

This song is like an appeal to the Lord.

Andal says to the Lord:

Hey Govinda, You are without any blemish (kuRai ondrum illaatha).

We are very much ignorant (aRivu ondrum illaatha), cattle rearing clan (Aaikulam), who knows nothing other than going behind the cattles (kaRavaigaL pin sendru) to the forest (kAnam sErndhu) and eat there (uNbOm).

We dont even know what good deeds have we done, to have you been born amongst us (undhannai piRavi perundhanai puNNiyam yaam udaiyom).

This relationship between you and us can never be destroyed (undhannodu uRavEl namakku ingu ozhikka ozhiyaathu).

We, out of our ignorance (aRiyaatha pillaigalom), would have called you with silly names (undhannai siRupEr azhaitthanamum) out of love (anbinAl).

Please do not get angry with us (seeRi aruLaathe). Please give us protection (paRai).

What is evident from this is, God will accept how ever we call him out of love.

Friday, September 7, 2018

திருப்பாவை பாடல் 27 - Tiruppaavai Song 27

கோதைமொழி கோலமொழி - 27

27.
கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பலகலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

மிகவும் முக்கியமான பாடல். சத்சங்கம் என்றால் கூடி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் அற்புதமான பாடல்.

26 ஆம் பாடலில், பறை முதலியவற்றை அருள வேண்டும் என்று கேட்டாகிவிட்டது. இந்தப் பாடலில், கண்ணன் அவற்றைத் தந்துவிட்டான் என்று அறிவிக்கிறாள். அதனால் அனைவரோடும் தாம் கூடி இருந்து மனம் குளிர்ந்து, நோன்பின் பலனை அடைந்துவிட்ட மகிழ்ச்சியைக் கொண்டாடப் போவதாகப் பாடுகிறாள்.

கூடார் என்றால் பகைவர். பகைவர்களை வெல்லும் சிறப்பு மிகுந்த கோவிந்தா! என்று தொடங்குகிறாள். கோவிந்தனைப் பாடி, பறையைப் பெற்றுவிட்டோம். இதனால் நமக்குக் கிடைக்கப்போகும் வெகுமதி என்னவென்றால், "நாடு புகழும் பரிசு". அதாவது மக்களின் பாராட்டு. அவர்கள் பாரட்டுவதற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள் மகிழ்வோடு இருக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சிக்குக் காரணம், இறைவன் அருளே. அதனால், நமக்கு இறையருள் கிட்டியதால், சூடகம், தோள் வளை, தோடு, செவிப்பூ, பாடகம் முதலிய ஆபரணங்களை அணிந்து, எம்பெருமானும், பிராட்டியும் மகிழும் வண்ணம் மங்களகரமாக இருப்போம். புதிய ஆடைகளை உடுப்போம். அதற்குப் பின், பால் சோறு உண்போம். சக்கரைப்பொங்கல் அல்லது அக்காரவடிசல் என்னும் பால் சோறு. அது எப்படி இருக்கிறது? நெய்யில் மூழ்கி இருக்கிறது. அந்த நெய்யானது, பாத்திரத்தில் கைவிட்டு பொங்கலை எடுப்பவரின் முழங்கை வரை வழிகிறது. அப்படிப்பட்ட பிரசாதத்தை, எல்லாரோடும் சேர்ந்து உண்போம்.

இவ்வாறு பாடி முடிக்கிறாள்.

kOthaimozhi kOlamozhi - 27

27.
koodArai vellum seer gOvindA undRannai
pAdi paRaikoNdu yAm perum sammAnam
nAdu pugazhum parisinAl nandRAga
choodagamE thOLvaLaiyE thOdE sevippoovE
pAdagamE endRanaiya palgalanum yAm aNivOm
aadai uduppOm athan pinnE pAl sORu
mooda nei peithu muzhangai vazhivAra
koodi irundhu kulirndhu yEl Or empAvAi

This song explains the result achieved by following the pAvai nOnbu in mArgazhi month. Till this song, the girls have not adorned them with ornaments. In this song, Andal says since they have achieved the result of pAvai nOnbu (winning the lord's heart, his gift like drum etc), they wear new dress (aadai uduppOm), ornaments like choodagam, thOLvaLai, thOdu [ear rings], sevi poo, pAdagam and other ornaments (endranaiya pal kalanum yaam anivom).

They sang (pAdi) the lord's fame [fame (seer) of GovindA who is capable of winning over (vellum) those who didnt surrender at His feet (koodAr)] and got the gift (paRai kONdu) from the lord himself (yaam perum sammaanam) . They will be celebrated by the world for their achievement (nAdu pugazhum parisu). In the first song, Andal says they will follow pAvai nonbu and be praised by the world (pArOr pugazha padindhu). In this song, she has achieved it.

So, after achievement what is there? Obviously celebration. They celebrate by eating a sweet. It is made of rice, jaggery and milk (pAl- milk, SORu - rice). But this is covered by huge quantities of ghee (mooda nei peithu), which adds taste. During the period of pAvai nOnbu, they avoided milk and ghee (nei uNNOm pAl uNNOm). Now they take it. The high ghee content is well explained by the phrase mooda nei peithu muzhangai vazhi vAra - if they take the sweet from the container, the ghee flows down from their hand till elbow (muzhangai).

Another important point to note is, they celebrate together along with the Lord, who gave them this success. Koodi irundhu kuLirndhu.

Thursday, September 6, 2018

திருப்பாவை பாடல் 26 - Tiruppaavai Song 26

கோதைமொழி கோலமொழி - 26

26.
மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பால்அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில் தமக்கு வேண்டுவனவற்றை எல்லாம் கண்ணனின் முன் மொழிகிறாள் ஆண்டாள். எதற்காக அவைகளை வேண்டுகிறாள் என்னும் காரணத்தையும் தெரிவிக்கிறாள்.

திருமாலே! மணிவண்ணா! மார்கழி மாதம் நீராடி, நோன்பு நோற்று உன்னைத் துதிக்கும் எங்களுக்கு வேண்டுவன என்ன என்பதை இப்போது கூறுகிறேன். கேட்டருள்வாயாக.

1. உன் கையில் இருக்கும் பாலின் நிறம் உடைய பாஞ்சஜன்யம் என்னும் சங்கானது, எப்படி இந்த உலகத்தை நடுநடுங்கச் செய்யும் பெரும் சத்தம் உடையது! அது போல எங்களுக்கும் பல வெண்சங்குகள் வேண்டும். அப்போது தான், நாங்கள் எல்லாரையும் எழுப்பி, வழிபாட்டிற்கு வருமாறு அழைக்க முடியும். (ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன, பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியம் போல்வன சங்கங்கள்)

2. பெரிய பறை வாத்தியம் (சாலப் பெரும் பறை)

3. பல்லாண்டு இசைப்பவர்கள் (பாகவதர்களையும் தந்தருள வேண்டும் என்று பெருமான் இடத்திலேயே கேட்கிறாள். அவன் அருளாலே தான் அவனை வணங்க முடியும் என்பதைப் பறைசாற்றுகிறது இந்த இடம்)

4. அழகிய விளக்கு (கோல விளக்கு) - விடியற்காலையில் அடியார்கள் கூடுவதற்கு வெளிச்சம் வேண்டும் அல்லவா?)

5. கொடி - நாம் யாவரும் அடியார் என்பதைக் காட்ட ஒரு கொடி. ஒரு கொடியின் கீழ் இருக்கிறோம் என்றால், நம் எண்ணம், பேச்சு, செயல் யாவும் ஒத்துப்போக வேண்டும். அதற்காகவே நாட்டிற்குக் கொடி, கட்சி என்றால் கொடி என்று உள்ளது.

6. விதானம் - பந்தல் வேண்டும் என்கிறாள். மார்கழி குளிர் காலம் அல்லவா? அந்தப் பனித்துளிகள் நம் மேல் விழுந்து, நமக்கு இடையூறு அளிக்காமல் இருப்பதற்காக ஒரு கூடாரம் / பந்தல் வேண்டும் என்கிறாள்.

இவை யாவையும், ஆலிலையில் அறிதுயிலும் அச்சுதனே, அருள்வீராக

என்று முடிக்கிறாள்.

kOthaimozhi kOlamozhi - 26

26.
mAlE! maNivaNNA! mArgazhi neerAduvaan,
mElaiyaar seivanagal vEnduvana kEttiyEl-
gnaalatthai yellam nadunga muralvana
paalanna vannatthu paancha janyame
pOlvana sangangaL, pOi pAdu udayanave
saalap perum paRaiyE, pallAndu isaippArE,
kOla viLakkE, kodiyE, vidhAnamE,
Alin ilaiyaai arulElOr empAvAi

In this song, AndAl answers to the question asked by the Lord. The lord asks her, "what is mArgazhi neerAttam? what do you want from me for following the pAvai nOnbu?"

Andal addresses the lord as "Oh the beloved one (mAl), lord with the complexion of sapphire (maNi vaNNan), the objective of this pAvai nOnbu is to get you. That is be always with you, in your thought. So for that we need some instruments like conch (sangangaL), drum [paRai] (to wake up people), singers (to sing your fame - pallAndu isaippAr), lamp to show the path (viLakku), flag (kodi - to show our unity) and a make shift shelter (vidhAnam - to protect us from the fog, snow drops). Granting these things is not a problem to you. Because you, once during the deluge, had the entire universe in your stomach and you were comfortably sleeping on a banyan leaf (aalin ilaiyaai).

The conch should be like your conch - pAnchajanyam, whose sound (muralvana) trembles (nadunga) the whole world (gnalam) and which is as white as milk (pAl anna vannatthu).

The drum should be having lot of space (pOi paadu) and should be big (saala perum) so that it sounds loudly.

Wednesday, September 5, 2018

திருப்பாவை பாடல் 25 - Tiruppaavai Song 25

கோதைமொழி கோலமொழி - 25

25.
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக், கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில், கண்ணனின் பிறப்புப் பற்றி ஆண்டாள் பாடுகிறாள்.

மதுரையில், கம்சனின் ராஜ்ஜியத்தில் உள்ள ஒரு சிறைச்சாலையில், தேவகி - வசுதேவருக்குப் பிறந்தான். (ஒருத்தி மகனாய்ப் பிறந்து). அன்று இரவில், வசுதேவர், ஒரு கூடையில் அக்குழந்தையை, யாருக்கும் தெரியாமல் (ஒளித்து) எடுத்துக்கொண்டு, யமுனையின் மறுகரையில் உள்ள, கோகுலத்திற்கு எடுத்துச் சென்று, யசோதையின் அருகில் வைத்தார். யசோதையின் குழந்தையை சிறைக்கு எடுத்து வந்தார். கோகுலத்தில், யசோதையின் மகனாக வளர்ந்தான் கண்ணன் (ஒருத்தி மகனாய் ஒளித்து வளர).

சிறையில் உள்ள பெண் குழந்தையைக் கொல்ல கம்சன் வந்தான். அப்போது, அக்குழந்தை, கம்சனின் பிடியிலிருந்து தப்பித்து, வானை நோக்கி சென்றது. மேலும், கம்சனிடம், "உன்னைக் கொல்லப் போகும் குழந்தை, கோகுலத்தில் வளர்கிறது" என்று கூறி, அவனது அச்சத்தை மேலும் பெருக்கியது. தீங்கு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் கம்சனின் வயிற்றில் நெருப்பாய் நின்றான் கண்ணன்.

கம்சனுக்கு அச்சத்தை விளைவித்த கண்ணனே, உன்னிடம் நாங்கள் ஆசைக்கொண்டு வந்தோம். நீ, நாங்கள் கேட்கும் பறையைத் தந்தருளினால், உன் பிரட்டி மகிழும் வண்ணம், எங்களிடம் இருப்பனவற்றை, சமர்ப்பிக்கிறோம். உனக்கே சேவை செய்து, உன் புகழைப் பாடி எங்களது வருத்தத்தைத் (உன்னைக் காணாமல் இருந்ததினால் உண்டான வருத்தத்தை / பிறவித் துன்பத்தை) தீர்த்துக்கொண்டு மகிழ்வோடு இருப்போம்.

kOthaimozhi kOlamozhi - 25

25.
orutthi maganaai piRandhu Or iravil
orutthi maganaai oLitthu vaLara
tharukkillaan aagi thaan theengu ninaindha
karutthai pizhaippitthu kanjan vayitRinil
neruppenna nindRa nedumAle unnai
arutthitthu vandhOm paRai tharuthiyaagil
thirutthakka selvamum sEvagamum yAm pAdi
varutthamum theerndhu magizhndhElOr empAvAi

This song describes the birth of Sri krishna in few lines. Krishna was born to Devaki - VasudEva in the prison of KamsA's kingdom Mathura (orutthi maganaai pirandhu). Immediately after his birth, in the dark night (Or iravil), he was transported to Ayarpadi secretly (oLitthu) by VasudEva and was left with Yasodha - Nanda gopan and grew there (orutthi maganaai valara).

Kamsa killed all the elder siblings of Krishna and was about to kill the girl child (pretended eight child of Devaki -
vasudeva). But it was yOga Maya who was born to Yasodha at Ayarpadi and was brought back by Vasudeva secretly. Kamsa does not want that child to live. He could not bear the news that the eight child of Devaki was alive (tharukkillaan). He wanted to harm the child who is growing at Ayarpadi (thaan theengu ninaindha kanjan). He devised sevaral plans to kill Krishna. But all his plans were destroyed (karutthai pizhaippitthu) and Krishna stood as a fire in Kamsa's stomach, making him tensed (neruppu ena nindra nedumAl).

Oh Lord (nedumAl), we all have come to you out of our love (arutthitthu vandhOm) with a belief that you will grant us our wish (parai). If you grant us our wish (paRai tharuthi yaagil), we will offer our service (sEvagam) and our belongings (that will make your consort happy - thiru thakka selvam) by singing your fame (yaam paadi) and empty all of our sorrows (varutthamum theerndhu) attained due to separation from you and will be happy thereafter (magizhndhu).

Tuesday, September 4, 2018

திருப்பாவை பாடல் 24 - Tiruppaavai Song 24

கோதைமொழி கோலமொழி - 24

24.
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல்போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம்போற்றி
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி
என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோர் எம்பாவாய்

இப்பாடல் ஒரு அர்ச்சனை பாடல் என்றே சொல்ல வேண்டும்.

முதலில் வாமனாவதாரம் பற்றி வருகிறது. முன்பொருநாள், இந்த உலகத்தை, உன் திருவடியாலே அளந்தாவனே! உனது பாதத்திற்கு என் வணக்கங்கள்.

அடுத்து இராமாவதாரம் வருகிறது. சென்று அங்குத் தென் இலங்கை செற்றாவனே! உன் வீரத்திற்கு என் வணக்கங்கள்.

இனி கண்ணனின் அவதார லீலைகள் வருகிறது.

பொன் நிறம் கொண்ட, சக்கர வடிவில் வந்த சகடாசுரனை உதைத்து அழித்த உன் புகழுக்கு என் வணக்கங்கள்.
கன்றின் வடிவில் வந்த வத்ஸாசுரனை, ஒரு கல்லாக தூக்கி, விளா மரத்தின் வடிவில் இருந்த கபித்தாசுரனின் மேல் எறிந்தவனே, உன் கழலுக்கு என் வணக்கங்கள்.
கொடிய மழையிலிருந்து, கோகுலத்தைக் காக்க, கோவர்தன மலையைக் குடையாய்ப் பிடித்தவனே, உன் தயாள குணத்திற்கு என் வணக்கங்கள்.
பகைமையை அழிக்கும் வல்லமையுடைய உன் கையில் இருக்கும் வேலுக்கு என் வணக்கங்கள்.

இவ்வாறெல்லாம் புகழ்ந்து, உனக்குச் சேவை செய்வதையே லட்சியமாக உடைய எங்களுக்குக் கருணை புரிய வேண்டும். பறை வாத்தியத்தை அருள வேண்டும்.

என்று பாடி முடிக்கிறாள்.

kOthaimozhi kOlamozhi - 24

24.
andRu ivvulagam aLandhaai adi pOtRi
chendRu angu then ilangai chetRAi thiRal pOtRi
pondRach chagadam udhaithaai pugazh pOtRi
kandRu kunilaa eRindhAi kazhal pOtRi
kundRu kudaiyaai edutthaai guNam pOtRi
vendRu pagai kedukkum nin kaiyil vEl pOtRi
endRu endRu un sEvagamE yEtthi paRai koLvAn
indRu yaam vandhOm irangElOr empAvAi

In this song, the avatAra leelaas are very well portrayed.

1. andRu ivvulagam aLandhaai adi pOtRi - Prostrations (pOtRi) to the feet (adi) of the lord who measured (andRu aLandhaai) this world (ivvulagam) - vAmana avatAram
2. chendRu angu then ilangai chetRAi thiRal pOtRi - Prostrations to the power (thiRal) of the lord who went (sendru angu) to Lanka (then ilangai) and conquered it (chetRAi) - Rama avataram
3. pondRach chagadam udhaithaai pugazh pOtRi - Prostrations to the fame (pugazh) of the lord who kicked (udhaitthaai) the golden hued wheel (pondrach chagadam) - Krishna avataram
4. kandRu kunilaa eRindhAi kazhal pOtRi - Prostrations to the feet (kazhal) of the lord who threw the asura in the form of a calf (vatsaasuran) on the kiwi tree (vilaam pazha maram - kapitthaasuran) - Krishna avataram
5. kundRu kudaiyaai edutthaai guNam pOtRi - Prostrations to the character (gunam) of the lord who took up (edutthaai) the mountain (govardana - kundRu) as an umbrella (kudaiyaai) to save the entire aayarpaadi from deluge - krishna avataram
6. vendRu pagai kedukkum nin kaiyil vEl pOtRi - Prostrations to the spear (vEl) in the hand of the lord (nin kaiyil) that slays the enemity (pagai kedukkum) and conquers the enemies (vendru).

Like this (endru endru) we have come here today (indru yaam vandhOm) singing your fame (yEtthi) to get an opportunity to serve you (un sevagame) and get your protection (paRai koLvAn). Please show your mercy on us (irangu).

Monday, September 3, 2018

திருப்பாவை பாடல் 23 - Tiruppaavai Song 23

கோதைமொழி கோலமொழி - 23

23.
மாரி மலைமுழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போரருமா போலேநீ பூவைப்பூ வண்ணா உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்து இருந்து யாம்வந்த
காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

மாரி - மழைக்காலம்
மலை முழைஞ்சில் - மலையில் உள்ள குகை.

மழைக்காலத்தில், மலையில் உள்ள குகையில் படுத்துறங்கும், பெருமை மிக்க சிங்கம், அந்த மழைக்காலம் முடிந்தவுடன், துயிலெழுந்து, கூர்மையான கண்களால் பார்க்கும். பின்னர், தன் உடலை ஒரு உதறுதறி, வேரி மயிர் எழும்ப, நிமிர்ந்து எழுந்து, கர்ஜித்து நடக்கத் தொடங்கும். அதுபோல, கண்ணா, பூவைப் பூ போன்ற நிறம் கொண்டவனே, உன் கோயிலின் வாசலுக்கு நீ வர வேண்டும். சிங்கம் போல நடை நடந்து வர வேண்டும்.

பின்னர், பெருமை மிகவுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து, எங்களது வேண்டுதல்களை பரிசீலித்து, அருள வேண்டும்.

எட்டாவது பாடலில், ஆவாவென்று ஆராய்ந்து அருள் என்று பாடுகிறாள். இங்கு, "யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள்" என்கிறாள்.

kOthaimozhi kOlamozhi - 23

23.
mAri malai muzhainjil mannikkidandhu uRangum
seeriya singam aRivutRuth theevizhitthu
vEri mayir ponga eppAdum pOrndhu udhaRi
moori nimirndhu muzhangi puRappattu
pOdharumA pOlE nee poovaippoo vaNNA un
kOyil nindRu innganE pOndharuLi kOppudaiya
seeriya singaasanatthu irundhu yaam vandha
kAriyam Araaindhu aruL yEl Or empAvAi

In this song, the Lord has awaken from sleep. Andal describes it as a lion coming out of the den after the autumn is over.

During rainy season (mAri), Lion (seeriya singam) will be sleeping inside the den (mannik kidandhu uRangum) under the mountain (malai muzhainjil). Once the rain is over, it will wake up (aRivutRu) and see the external world with its sparkling eyes (thee vizhitthu). Then it will get up from that place. How?

It will rise up by shaking its body and mane (vEri mayir ponga eppaadum pOrndhu udhaRi) and then will stand up in a majestic way (moori nimirndhu) and roar (muzhangi). After that it will come out of the den (puRappattu).

Like that (pOdharumaa pOlE), Lord Krishna (poovai poo vanna) comes out of his palace (un kOyil nindru inngane pOndhu aruLi) and sits on His beautiful throne (kOppudaiya, seeriya singAsanatthu irundhu).

After sitting on the throne, Andal asks the lord to shower boons on them after analysing their motives (kAriyam Araaindhu aruL).

In the eight song too, Andaal stresses on giving boons after analysis (aavaavendru aaraaindhu arul). Boons should be given to those whose motive are for World's good. Not all seekers should be granted boons.

Sunday, September 2, 2018

திருப்பாவை பாடல் 22 - Tiruppaavai Song 22

கோதைமொழி கோலமொழி - 22

22.
அம்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டில் கீழே
சங்கம் இருப்பார்போல் வந்து தலைப்பு எய்தோம்
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தால் போல்
அம்கண் இரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல்
எங்கள்மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில், இறைவனின் கடைக்கண் பார்வை நமகுக் கிடைத்தால் அதனால் நாம் பெறும் நன்மையைப் பற்றிப் பாடுகிறாள்.

அம் கண் மா ஞாலத்து அரசர் - பெரியதும், அழகியதுமான இந்த பூமியில் ஆட்சி செய்யும் அரசர்கள், மரியாதை நிமித்தமாக (அபிமான பங்கமாய்), நீ பள்ளி கொண்டிருக்கும் கட்டிலுக்கு அருகில் கூடி இருப்பார்கள் (சங்கம் இருப்பார்). அவர்கள் போல், நாங்களும் தலைவணங்கி உன் முன்னே நிற்கின்றோம்.

கிங்கிணி - அரைச்சதங்கை. இடையில் கட்டும் ஒரு ஆபரணம். அதன் மணிகள், பாதி மூடியும், பாதி திறந்தும் இருக்கும். அவ்வாறு பாதி மூடி, பாதி திறந்து  இருக்கும், தாமரைப்பூப்போன்ற உன் கண்களால் (இப்போது தானே பள்ளி எழுந்துள்ளார், அதனால் பாதி மூடி, பாதி திறந்து கண்கள் காணப்படுகிறது) எங்கள் மேல் சிறிது சிறிதாக விழிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறாள்.

அவ்வாறு கண்ணன், இவர்களைப் பார்க்க எப்படி இருக்கிறது? சந்திரனும், சூரியனும் உதித்தால் போல இருக்கிறது. அந்தப் பார்வையானது நம் மேல் பட்டால், நம் சாபங்கள் யாவும் ஒழியும். ஐந்தாம் பாடலில் - தீயினில் தூசாகும் என்று பாடினாள். இப்போது இன்னும் ஊர்ஜிதமாக "எங்கள் மேல் சாபம் இழிந்து" என்று பாடுகிறாள்.


kOthaimozhi kOlamozhi - 22

22.
am kaN mA gnAlatthu arasar abimAna
pangamAi vandhu nin paLLik kattil keezhE
sangam iruppaar pOl vandhu thalaippu eithOm
kingini vaai seitha thAmaraip pooppOlE
sengaN siRuchiRidhE emmEl vizhiyAvO
thingaLum Adhithiyanum ezhundhArpOl
am kaN iraNdum koNdu engal mel nOkkuthiyEl
engaL mEl sAbam izhindhu yEl Or empAvAi

This song says the importance of the lord's glance falling on us.

Here also Andal says that the devotees are standing infront of the Lord's home (vandhu thalaippu eithOm) just like the great rulers of this Earth (am kaN mA gnAlatthu arasar) offer their salutations to the Lord, by bowing down their heads  (abimAna pangamAi vandhu) in front of His throne (nin paLLi kattil keezhE sangam iruppaar pOl).

She then asks the lord to glance on them (siruchiridhe emmel vizhiyaavo) with the red eyes (sengaN) that are like the half opened and half closed beads of the hp belt (kinkini). Since the lord has awaken just now, his eyes are not fully opened.

When the lord sees us with his half opened and half closed eyes, how does it looks?


They look like the rising  Sun (adhithiyan) and moon (thingaL). If the lord gives a glance (nokkuthiyel) with his beautiful eyes (am kaN irandum kondu) to the devotees (engal mel), then all the ill deeds, curses will be destroyed (engal mel saabam izhindhu).

Saturday, September 1, 2018

திருப்பாவை பாடல் 21 - Tiruppaavai Song 21

கோதைமொழி கோலமொழி - 21

21.
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துஉன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில், சரணாகதி தத்துவம் பேசப்படுகிறது.

ஆண்டாள், கண்ணனை எவ்வாறெல்லாம் அழைக்கிறாள்? முதலில், கோகுலத்தில் உள்ள பசுக்களின் சிறப்பைச் சொல்கிறாள்.

மூன்றாவது பாடலில், வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் என்றாள். இப்போது, ஏற்றக் காலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப, மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்" என்கிறாள். அதாவது, பசுக்கள் பாலைத் தானாகவே தருகின்றன. நாம் சென்று கறக்க வேண்டும் என்பதே இல்லையாம் கோகுலத்தில். அந்தப் பாலானது, பாத்திரத்தைத் தாண்டி, வழிந்து ஓடுகின்றது. அப்படிப்பட்ட பசுக்களைக் காக்கும் "நந்தகோபனின் மகனே" என்று முதலில் அழைக்கிறாள். ஆற்றப் படைத்தான் மகனே என்று அழைக்கிறாள்.

அடுத்து, "ஊற்றம் உடையாய்" என்று அழைக்கிறாள். ஊற்றம் என்றால் ச்ரத்தை / ஈடுபாடு. அடியாரைக் காப்பதில் கண்ணனுக்குத் தனி ஈடுபாடு.

"பெரியாய்" என்றும் அழைக்கிறாள். பெருமை மிக்கவன் பெரியவன்.

இதுபோக, உலகின் தோற்றமாய் நின்ற சுடரே என்றும் அழைக்கிறாள்.

அறிவுறாய், துயில் எழாய் என்று கண்ணனைக் கேட்டுக்கொள்கிறாள். அறிவுறுதல் என்றால் பள்ளி எழுதல்.

இப்போது, கண்ணனை எழுப்பியாயிற்று. தாங்கள் எப்படி இருகின்றோம் என்பதை, அவனுக்குக் கூறுகிறாள். "கண்ணனே, உன்னை எதிர்த்தவர்கள் யாவரும், தோல்வியுற்று, உன் வாசலில் வந்து நின்று, உன் கருணையை எதிர்நோக்கி, உன் காலடியில் பணிவார் போல, நாங்களும் உன் வாசிலில் வந்து நின்று, உன் புகழைப் போற்றி, காத்துக்கிடக்கிறோம்" என்று பாடுகிறாள். அடுத்தப் பாடலிலும் இதன் தொடர்ச்சி வரும்.

kOthaimozhi kOlamozhi - 21

21.
yEtRa kalangaL ethirpongi meethaLippa
mAtRAthE pAl soriyum vaLLal perum pasukkaL
AtRap padaitthaan maganE aRivuRAi
ootRam udaiyAi periyAi ulaginil
thOtRamAi nindra sudarE thuyil ezhAi
mAtRAr unakku vali tholaindhu un vAsal kaN
AtRAdhu vandhu un adi paNiyumA pOlE
pOtRiyAm vandhOm pugazhdhelOr empAvAi

This song describes the saraNAgathi philosophy.

Krishna is described as the son of virtuous NandagOpa (Atrap padaitthaan magane), who looks after the cows that will keep on lactating (mAtRAthE pAl soriyum vaLLal perum pasukkaL) even after the vessel gets filled and overflowed (yEtRa kalangaL ethirpongi meethaLippa). Please wake up from the sleep oh! Krishna, the son of Nandagopa.

In the third song, Andal says about vAnga kudam niRaikkum vaLLal perum pasukkaL. In this song, she sees them with her own eyes at Gokulam. (yEtRa kalangaL ethirpongi meethaLippa, mAtRAthE pAl soriyum vaLLal perum pasukkaL).

Then she says krishna as the one

1. who is an expert in slaying away the difficulties of His devotees (ootRam udaiyaai).
2. Who is the great one in terms of virutes (periyaai)
3. who is the form of fire (sudar - thEjo maya)

She then compares the state of the devotees to the state of the enemies who lost to Krishna after their fight and are begging for pardon as there is none to forgive them other than the Lord Himself.

Like those enemies (matraar) who stand for mercy after getting defeated (vali tholaindhu un vaasal kan aatraadhu vandhu un adi paniyumaa pOlE), we are also standing in front of your house singing your fame (potriyaam vandhom).

Friday, August 31, 2018

திருப்பாவை பாடல் 20 - Tiruppaavai Song 20

கோதைமொழி கோலமொழி - 20

20.
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்
செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில், பெருமாளையும் பிராட்டியையும் துயிலெழுப்புகிறாள்.

1. முப்பத்து மூவர் மற்றும் தேவர்களுக்கும், துன்பம் வரும் முன்னரே உடனடியாகச் சென்று அவர்கள் துன்பங்களைக் களையும் பெருமை மிக்கவனே (கலியே)

முப்பத்து மூவர் = எட்டு வசுக்கள், பதினொரு ருத்திரர்கள், பன்னிரண்டு ஆதித்தியர்கள், இரண்டு அஸ்வினி தேவர்கள் (8+11+12+2 = 33).

2. உண்மை மற்றும் தர்மத்தின் வடிவே (செப்பம் உடையாய்)
3. பலம் மிக்கவனே (திறல் உடையாய்)
4. பகைவர்களுக்குத் துன்பத்தைக் கொடுக்கும் தூயவனே - செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா

இப்படிப்பட்ட கண்ணனே, துயில் எழுவாயாக.

அடுத்து, நப்பின்னையை அழைக்கிறாள்.

1. நப்பின்னை நங்கையே,
2. திருவே (இலக்குமி போன்றவளே),
3. பெருமானோடு எப்போதும் கூடி இருப்பதால், தாபம் என்பதே அறியாத முலை உடையவளே (செப்பென்ன மென் முலை),
4. சிவந்த அதரங்கள் உடையவளே (செவ்வாய்),
5. சிற்றிடை உடையவளே (சிறு மருங்குல்),

துயில் எழுவாயாக.

உயர்ந்த பெண்களுக்கு, இடை, சிறிதாக இருத்தல் சாமுத்ரிகா லக்ஷணத்தில் சொல்லப்பட்டது. "ஸ்தனபார தலன் மத்ய பட்ட பந்த வலித்ரயா" என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும். அம்பாளின் கருணை ததும்பும் பெரிய மார்பகங்களின் பாரத்தைத் தாங்க முடியாத மெல்லிய இடையைப் பிடித்துக்கொள்வதற்கு, மூன்று கோடுகள் அந்த இடையில் உள்ளன என்று. நுண்ணிடை என்பதால் அந்தக் கோடுகள் தெரியும்.

உக்கம் என்றால் - விசிறி. தட்டொளி என்றால் கண்ணாடி. (தட்டு + ஒளி - வெளியில் உள்ள ஒளியை, பிரதிபலிக்கக்கூடிய தட்டு.) விசிறியையும், கண்ணாடியையும் சற்று நேரம் எங்களிடம் கொடுங்கள் தாயே. நாங்கள் சற்று நேரம், உன் மணாளனை உபசரிக்கிறோம் என்று கூறி முடிக்கிறாள்.

பூஜை விதியில் உள்ள சோடஷ உபசாரங்களில் உள்ளவையே இந்த விசிறி வீசுவது, கண்ணாடி காட்டுவது. பெரியாழ்வாரின் பெண் அல்லவா? பூஜை விதிமுறைகள் பற்றித் தெளிவாகப் பாடுகிறாள்!

kOthaimozhi kOlamozhi - 20

20.
muppatthu moovar amararkku mun sendru
kappam thavirkkum kaliyE! thuyilezhaai
cheppam udaiyaai! thiRal udaiyaai! chetRArkku
veppam kodukkum vimaLA! thuyilezhaai
cheppenna menmulai chevvaai siRu marungul
nappinnai nangaai thiruvE thuyilezhaai
ukkamum thattoLiyum thandhu un maNALanai
ippozhuthe emmai neeraattelor empaavaai

This song tells us the greatness of Lord Krishna.

Characteristics of Krishna

1. muppatthu moovar amararkku mun sendru kappam thavirkkum kali - Krishna is the one who goes to save muppatthu moovar [33 people] (8 vasukkaL, 11 rudrAs, 12 Adityaas and 2 Aswini devAs - 8+11+12+2 = 33) and dEvar (celestial beings) even before any problem comes to them.
2. cheppam udaiyaai - The one who is truthful or righteous
3. thiRal udaiyaai - The one who is omnipotent
4. chetRArkku veppam kodukkum vimaLA - the pure one (vimala) who gives trouble (veppam) to enemies (setRaar)

Andal asks the lord with such qualities to wake up.

Then comes the description of Nappinnai.

1. Andal calls Nappinnai as Nappinnai nangaai (oh great lady nappinnai).
2. She addresses her as Lakshmi devi (thiru).
3. Nappinnai has tender breasts (cheppanna men mulai) [its always with the lord. so there is no anxiety with her].
4. Her lips are red (chevvaai).
5. Nappinnai has a slim hip (siRu marungul).

Having small hip is one of the sAmudrikA lakshanam (sthana baara thalan madhya patta bandha valithraya (Devi's breasts are laden with compassion. So it is very much tender. Since compassion is more, its size is also huge. The weight of the tender breasts could not be born by her small hip. So some 3 lines are formed on the hip - Lalitha sahasranama).

Andal asks nappinnai to wake up.

She is then asking Nappinnai to hand over the fan (ukkam) and mirror (thattu oLi) to them so that the devotees can serve the lord with those upachaaraas for sometime from now onwards. Please note that a fan and mirror are part of sodasha upachaaraas done to Lord in temple during maha deepaaradhanai time.

Thursday, August 30, 2018

திருப்பாவை பாடல் 19 - Tiruppaavai Song 19

கோதைமொழி கோலமொழி - 19

19.
குத்து விளக்கெரிய கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேல் ஏறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பினை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா வாய்திறவாய்
மைத்தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவு ஆற்றகில்லாயால்
தத்துவம் அன்று தகவேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில், ஆண்டாள், கண்ண பிரானை, ஒரு வார்த்தையாவது சொல்ல வேண்டும் என்று வேண்டுகிறாள்.

குத்து விளக்கு எரிந்து, ஒளி பரப்பிக்கொண்டிருக்கிறது. பெரிய கட்டில் மேல், மெத்தென்று உள்ள படுக்கையின் மேல், கொத்தாக பூக்களை அணிந்துள்ள நப்பின்னை பிராட்டியோடு சேர்ந்து பள்ளி கொண்டுள்ள மலர் போன்ற மார்பை உடையவனே! ஒரு வார்த்தையாவது எங்களுக்கு நீ அருள வேண்டும்.

அடுத்து நப்பின்னை பிராட்டியிடம் முறையிடுகிறாள். "மை அணிந்த கண்கள் உடையவளே, உன் மணாளனை, துயிலிருந்து எழ விடமாட்டாய் போலும்! அவ்வாறு அவர் துயிலெழுந்து வந்து, எங்கள் முன் நின்றாரெனில், அந்தப் பிரிவைத் தாங்க மாட்டாயோ? அப்படியெல்லாம் பயப்பட தேவை இல்லை. இவ்வாறு, உன் மணாளனை, எங்களுக்கு அருள் புரிய விடாமல், உன்னுடனேயே வைத்திருப்பது, உனக்குத் தகுந்த செயல் அன்று" என்று கூறி முடிக்கிறாள்.

kOthaimozhi kOlamozhi - 19

19.
kutthu viLakku eriya kOttukkAl kattil mEl
metthendra panja sayanatthin mEl yERi
kotthu alar poon kuzhal nappinnai kongai mEl
vaitthu kidantha malar mArbA vaai thiRavaai
maitthadan kaNNinAi nee un maNALanai
etthanai pOthum thuyilezha Ottaai kAN
etthanai yElum pirivAtRa killaaiyaal
thatthuvam andRu thagavElOr empAvAi

In this song, Andal talks to both Krishna and Nappinnai. She describes the room where Krishna and Nappinnai are sleeping. The room is illuminated with oil lamps (kutthu vilakku eriya). The cot on which the lord is sleeping, has huge pillar like legs (kOttukkaal kattil). It has a soft bed on it. The lord is sleeping on the bed (metthendra panja sayanatthin mel yeri) along with Nappinnai who wears a bunch of flowers on her hair (kotthu alar poonkuzhal nappinnai). "Oh lord! who has a broad chest (malar maarbaa) on which Nappinnai is resting, please open your mouth and tell a word to us (vaai thiRavAi)".

Then she addresses Nappinnai. "Oh the lady who wears kAjal on the eyes (mai thadam kaNNinAi), you wont let your beloved (nee un maNALanai) to wake up from the sleep and meet us (etthanai pOthum thuyilezha Ottaai kAN) because of the fear that you might get separated from Him (etthanai yElum pirivAtRa killaaiyaal) if he meets us. But its not fair and true (thatthuvam andRu)."

Wednesday, August 29, 2018

திருப்பாவை பாடல் 18 - Tiruppaavai Song 18

கோதைமொழி கோலமொழி - 18

18.
உந்து மதகளிற்றன்; ஓடாத தோள்வலியன்;
நந்தகோபாலன்; மருமகளே நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்.
வந்துஎங்கும் கோழி அழைத்தனகாண்; மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்;
பந்துஆர் விரலி! உன் மைத்துனன் பேர்பாடச்,
செந்தா மரைக்கையால், சீரார் வளைஒலிப்ப,
வந்து திறவாய் மகிழ்ந்து; ஏலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில், நப்பின்னை பிராட்டியை ஆண்டாள் எழுப்புகிறாள். அவளது மாமனின் புகழை முதலில் கூறி, அப்படிப்பட்ட நந்தகோபனின் மருமகளே என்று அழைக்கிறாள்.

நந்தகோபன் எப்படிப்பட்டவர்?

1. உந்து மத களிற்றன் - யானையைப் போல கம்பீரமான தோற்றம் உடையவன்.
2. ஓடாத தோள் வலியன் - தோல்வி என்பதே அறியாத தோள்களை உடையவன்.

அடுத்து, நப்பின்னையை வர்ணிக்கிறாள்.

1. கந்தம் கமழும் குழலி - வாசம் மிகுந்த கூந்தலை உடையவள்
2. பந்தார் விரலி - கண்ணனோடு பந்து விளையாடும் மெல்லிய விரல்களை உடையவள்.

பொழுது புலர்ந்தது என்பதை, இப்பாட்டில் இரண்டு விஷயங்கள் மூலமாக நமக்குத் தெரிவிக்கிறாள்.

1. வந்து எங்கும் கோழி அழைத்தன காண் - கோழி ஒலி எழுப்பி நம்மை அழைக்கின்றது பார்,
2. மாதவிப் பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண் - அழகிய பந்தல் மேல் பல வகையான குயிலினங்கள் வந்து நின்று கூவுகின்றன. பார்.

"யானையைப் போல் கம்பீரமான தோற்றமும், தோல்வி, தொய்வு அறியாத தோள்களும் உடைய நந்தகோபனின் மருமகளே, வாசம் நிறைந்த கூந்தலை உடைய நப்பின்னையே, கோழிகள் கூவின, குயிலினங்கள் கூவின. கண்ணனோடு பந்து விளையாடும் மென்மையான விரல்களை உடையவளே! உன் மைத்துனனின் (கணவனின்) பெயரை நாங்கள் பாட வேண்டும். செந்தாமரை போன்ற கைகளில், அணிந்துள்ள அழகிய வளைகள் ஒலி எழுப்புமாறு, மகிழ்வோடு கதவைத் திறக்க வேண்டும்." என்று ஆண்டாள் வேண்டுகிறாள்.

பெருமாளின் அனுக்ரகம் கிடைக்க, பிராட்டியின் கடாக்ஷம் வேண்டும் என்பதை நினைவூட்டும் வண்ணம் இந்தப் பாடல் அமைந்துள்ளது.


kOthaimozhi kOlamozhi - 18

18.
undhu madha kaLitRan OdAtha thOl valiyan
nandha gOpAlan marumagaLE nappinnAi
gandham kamazhum kuzhali kadaithiRavAi
vandhu engum kOzhi azhaitthana kAN mAdhavi
pandhal mel palkAl kuyilinangaL koovina kAN
pandhAr virali un maitthunan pEr pAdach
chendhAmaraik kaiyyAl seerAr vaLai olippa
vandhu thiRavAi magizhndhu yEl Or empAvAi

In this song, AndAl talks to Nappinnai piratti (consort of Krishna). First she describes about NandagOpan - He is a strong person with a majesticity of an Elephant. He has strong shoulders.

Oh! nappinnai, the daughter in law of Nandagopa, who is as majestic as an elephant (undhu madha kaLitRan) and who has strong and unfailing shoulders (OdAdha thOl valiyan). Oh! the lady with fragrant hair (gandham kamazhum kuzhali), please do come and open the door (kadai thiravaai). The cock has given the wake up call (kOzhi koovina kaaN) and the cuckoos, nightingales standing on the roof have also started to chirp (maadhavi pandhal mel palkaal kuyilinangal koovina kaan).

Andal then says, "Oh the one who have tender fingers that is meant for playing ball with Krishna (pandhaar virali), please come and help us to sing the glory of your beloved Krishna (un maitthunan pEr pAda) by opening the door. With your lotus like hand (senthaamaraik kaiyyaal) wearing the beautiful bangles, making sweet sound (seeraar vaLai olippa), please open the door happily."

To get the darshan of Lord, first we need to get the blessing of Goddess. This is portrayed in this song.

Tuesday, August 28, 2018

திருப்பாவை பாடல் 17 - Tiruppaavai Song 17

கோதைமொழி கோலமொழி - 17

17.
அம்பரமே தண்ணீரே சோறே அறம்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடஅறுத்து ஓங்கி உலகுஅளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயுன் உறங்கேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில், சிறுமியர் யாவரும், அரண்மனையின் (கோயிலின்) உள்ளே வந்துவிட்டனர். இப்போது, நந்தகோபன், யசோதை, கண்ணன் மற்றும் பலராமனை எழுப்புகிறார்கள்.

மனிதனின் அடிப்படை தேவைகள் எனப்படும், உடை (அம்பரம்), நீர் (தண்ணீர்), உணவு (சோறு) ஆகியவற்றை அள்ளி அள்ளி தானம் செய்யும் எம் அரசனான நந்தகோபனே, எழுந்தருள வேண்டும்.

கொடியைப் போல மென்மையான, எம் பிராட்டி யசோதையே, எழுந்தருள வேண்டும்.

திரிவிக்ரமாவதாரத்தின் போது, மூவுலகையும் அளக்க, வானத்தை (அம்பரம்) நோக்கி ஒரு காலை வைத்து, இப்பிரபஞ்சத்தின் ஆவரண ஜலத்தையும் கிழித்து அளந்த, தேவர்களின் தலைவனான கண்ணனே, எழுந்தருள்வாய்.

பிலம்பாசுரன் என்னும் அசுரனைக் கொன்று, வெற்றி பெற்ற, வீரக் கழலுடைய செல்வனான பலராமனே (பலதேவா), நீயும், உன் தம்பியும் (உம்பி) எழுந்தருள வேண்டும்.

இவ்வாறு, ஆண்டாள் அவர்களை, வெளியே நின்றுகொண்டு எழுப்புகிறாள்.

kOthaimozhi kOlamozhi - 17

17.
ambaramE thaNNeerE sORE aRam seyyum
emperumAn nandagOpAlA ezhundhiraai
kombanArkkellaam kozhundhE kula viLakkE
emperumAtti yasOdhA aRivuRAi
ambaram oodaRutthu Ongi ulagaLandha
umbar kOmAnE urangAthu ezhunthirAi
sembon kazhaladi chelva bala dEvA
umbiyum neeyum uRangElor empavai

In this song, Andal wakes up Nandagopan, Yasodha, Krishna and Balarama.

She qualifies Nandagopan as her great leader (emperumAn) who gives (aRam seyyum) food (sORu), water (thaNNeer) and dress (ambaram) to all magnanimously. This three are considered as the basic necessities for anyone. She asks, Nandagopan to wake up (ezhundhiraai).

Then Andal comes to Yasodha. Yasodha is described as the foremost woman of all women who are like delicate stem of a plant (kombanaarkku ellaam kozhundhu), bright light of the entire women clan (kuLa viLakku) and her (andal) leader (emperumAtti). Andal asks Yashodha to wake up (aRivuRaai).

Then she comes to Lord Sri krishna. She asks the lord who measured the three worlds (Ongi ulagaLandha) with his feet by breaking (oodu aRutthu) the sky (ambaram) not to sleep (uRangAthu) and wake up (ezhunthiRaai).

Next comes BalarAma. The one who wears the anklet (kazhal) made of pure gold (sem pon) on his feet (adi), BalarAmA (bala dEva) please wake up along with your younger brother (umbiyum neeyum uRangEl).

Monday, August 27, 2018

திருப்பாவை பாடல் 16 - Tiruppaavai Song 16

கோதைமொழி கோலமொழி - 16

16.
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய
கோயில் காப்பானே கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமியரோ முக்கு; அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

இப்போது, ஆண்டாளும் அவள் தோழிகளும், பெருமாள் கோயிலுக்கு (பாவைக் களம்) வந்து விட்டனர். அங்கு ஒரு காவலன் நின்றுகொண்டிருக்கிறான். அவனை, ஆண்டாள், "நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே" என்று அழைக்கிறாள். ஆயர்பாடியின் தலைவன் நந்தகோபன். அந்தக் கோயிலின் வாயில் எப்படி இருக்கிறது? "கொடித் தோன்றும் தோரண வாயில்" என்று பாடுகிறாள். அதாவது, ஒரு கொடி தெரிகிறது. மேலும் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளது. அந்த வாயிலில் உள்ள காவலனையும் அழைக்கிறாள். அவனிடம், அழகிய மணிகள் பதிக்கப்பட்ட கதவினைத் திறக்குமாறு கேட்கிறாள்.

"வாயில் காப்பானே, ஆயர் சிறுமியர் யாவரும் வந்து நிற்கின்றோம் (ஆயர் சிறுமியரோ முக்கு). மாயனும், மணிவண்ணனுமான எம்பெருமான், முன்னமே, 'நீங்கள் யாவரும் வாருங்கள். ஒலிக்கும் பறை வாத்தியத்தை (அறை பறை) உங்களுக்குத் தருகிறேன்' என்றார் (நென்னலே வாய்நேர்ந்தான்)" என்று கூறுகிறாள்.

"நாங்கள் யாவரும் தூயவர்களாய் வந்துளோம். அனைவரையும் துயிலெழுப்ப, பறை வாத்தியம் எங்களுக்கு அவசியம். நீங்கள் உங்கள் வாயால், "உள்ளே விடமுடியாது" என்று மட்டும் கூறிவிடாதீர்கள். கதவைத் திறந்துவிடுங்கள்" என்று முறையிடுகிறாள்.

கோயிலில், துவார பாலகர்களை வணங்கிய பின்னரே, பெருமாளை வணங்க வேண்டும் என்ற சம்பிரதாயத்தை ஆண்டாள் இப்பாடல் வாயிலாக நமக்குக் கூறுகிறாள். இன்னொரு கருத்து, காவலர்கள் - நம் குருமார்கள். ஆயர் சிறுமியர் - நாம். குருவின் வழிகாட்டுதலோடு (கதவை அவர்கள் திறப்பார்கள்), நாம் இறைவனை தரிசிக்கலாம் என்ற உள்ளர்த்தம் பொருந்தியது இப்பாடல்.

kOthaimozhi kOlamozhi - 16

16.
nAyakanAi nindRa nandhagOpan udaiya
kOyil kAppAnE kodithOndRum thOraNa
vAyil kAppAnE maNikkadhavam thAzhthiRavAi
Ayar chiRumiyarO mukku aRaipaRai
mAyan maNivaNNan nennalE vAi nErndhAn
thooyOmAi vandhOm thuyil ezhap pAduvAn
vAyAl munnam munnam mAtRAthEy ammA nee
nEya nilaik kadhavam neekkElOr empAvAi

Now the girls have reached the lord's temple. They consider it as the palace of NandagOpan (nAyaganaai nindra nandagopan udaiya kOyil). Andal addresses the security (kAppAn) and the gate keepers (vAyil kAppAn) of the temple. Every temple has a flag. Here, she says kodi thOndrum thOraNa vAyil (the entrance which shows the flag (kodi)).

Andal asks the guards to open the door (thaazh thiravaai), laden with valuable gems (maNi kadhavam). She introduces themselves as Ayar chirumiyar (girls of Ayarpadi). "All the girls have come and assembled in front of the temple (Ayar chirumiyarO mukku). Please open the door", she says.

Andal then says that the lord (mAyan, maNivaNNan) has earlier (nennalE) promised (vAi nErndhaan) to give the holy drums that will make sound (aRai paRai) and it would be easy for them to wake up people (thuyil ezha paaduvaan) to join the prayer session. They all have come there with clensed body (thooyOmAi vandhu).

Please open the door (nEya nilaik kadhavam neekke with out saying any excuses (vAyAl munnam munnam mAtRAdhEy ammA nee). This song also emphasises, that first we should worship the dwara paalakaas before worshipping the main deity in a temple. Another aspect is, the guards depict our guru. We are the Girls of Ayarpadi. If we keep worshipping the lord, our guru will open the door to have the darshan of God.

Sunday, August 26, 2018

திருப்பாவை பாடல் 15 - Tiruppaavai Song 15

கோதைமொழி கோலமொழி - 15

15.

எல்லே இளம்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்என்று அழையேன்மின் நங்கையீர் போதருகின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லைநீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார்போந்து எண்ணிக்கொள்
வல்ஆனை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடல், உள்ளே உறங்கி, இப்போது விழித்த ஒரு பெண்ணுக்கும், ஆண்டாளுக்கும் நடக்கும் ஒரு சம்பாஷனை.

ஆண்டாள் அழைக்கிறாள், "கிளி போன்றவளே! இது என்ன? இன்னுமா உறங்கிக்கொண்டிருக்கிறாய்?"

உள்ளே இருப்பவள், "இவ்வாறு சத்தாமாக அழைக்காதீர்கள் பெண்களே. இதோ வருகின்றேன்."

ஆண்டாளும்  மற்றவர்களும் இப்போது பேசுகின்றனர். "தேன் தடவினால் போல பேசும் உன் வல்லமையைப் பற்றி நான் அறிவேன்."

உள்ளே இருப்பவள், "நான் ஒன்னும் வல்லவள் அல்ல. நீங்களே பேசுவதில் வல்லவர்கள்." என்று கூறிவிட்டு, சற்று நேரம் யோசித்துப் பின் மறுபடியம் பேசுகிறாள். "சரி சரி விடுங்கள். நானே வாய்ச்சொல்லில் வல்லவளாக இருந்துவிட்டுப் போகிறேன்." என்று கூறி, தானே ஏற்றுக்கொள்கிறாள். இது மிகவும் முக்கியம். அடியார்களுக்குள் வாக்குவாதங்கள், அகந்தை, மமதை இருக்கக்கூடாது. விட்டுக்கொடுத்தல் மிகவும் முக்கியமான ஒரு பண்பு.

வெளியே இருப்பவர்கள், "சீக்கிரம் வா. நாம் யாவரும் அந்த நாராயணனைத் தானே துதிக்கப் போகிறோம். நீ மட்டும் என்ன வேறொருவனையா துதிக்கப் போகிறாய்?" என்றனர்.

உள்ளே இருக்கும் பெண், "எல்லாரும் வந்துவிட்டானரா?" என்கிறாள்.

வெளியில் இருப்பவர்கள், "எல்லாரும் வந்தாகிவிட்டது, வேண்டுமானால், வெளியே வந்து எண்ணிக்கொள்" என்கிறார்கள்.

ஆண்டாள் தொடர்கிறாள், "வலிய யானையைக் (குவளையாபீடம்) கொன்றவனும், எதிரிகளின் வலிமையை அழித்தவனும், வல்லவனும், மாய லீலைகள் புரிபவனுமான பரந்தாமனைப் பாடுவோம் வாருங்கள்".

kOthaimozhi kOlamozhi - 15

15.
yellE iLankiLiye innum uRanguthiyO
chillendRu azhaiyenmin nangaimeer pOtharugindrEn
vallai un katturaigaL paNdE un vaai aRidhum
valleergaL neengaLE naanEythaan aayiduga
ollai nee pOthaai unakkenna vERudaiyai
ellaarum pOnthArO pOndharpOndhu eNNikkoL
vallaanai kondRaanai mAtrArai mAtRu azhittha
vallaanai maayanai pAdElOr empAvAi

This song is a dialogue between Andal and the girl sleeping inside the home.

Andal calls the girl in this song as a tender parrot (iLam kiLi). She asks her whether still she is sleeping (yellE innum uranguthiyo).

The girl who is sleeping inside now replies asking AndAl not to call her aloud in the cold morning time (chillendru azhaiyenmin) and she will come now (nangaimeer pOtharugindren).

Now, Andal says "I know about your sugar coated speech." (vallai un katturaigal pande un vaai aridhum)

The girl speaks, "No. I am not an expert in speech. You people are the experts." Saying so, this girl thinks for a while and continues, "Ok, let me be an expert. What is that to be done for you from my side?" (vallergal neengale naanethaan aayiduga)

Now those who are standing outside the home are saying, "Please come out fast. We all are going to offer our prayers to the same Lord Sri Narayana right?". (ollai nee pothaai unakkenna veRudaiyai)

The girl then asks, "Have all come?" (ellaarum ponthaaro)

Others replied, "Yes, all has come. You can come out and count the heads.". (pOndhaarpOndhu ennikkoL)

Andal says, "Please come and sing (paadu yEl Or) the glory of the lord who

1. killed the mighty elephant (kuvalaiyaapeedam), [vallaanai kondraanai]
2. destroyed the might of His enemies and who is an expert in it and [maatraarai mAtru azhittha vallaanai]
3. attracts everyone with his illusionary powers [mayanai].

Saturday, August 25, 2018

திருப்பாவை பாடல் 14 - Tiruppaavai Song 14

கோதைமொழி கோலமொழி - 14

14.

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுனீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

இப்பாடலில், ஆண்டாள் எதைத் தெரிவித்து, பொழுது விடிந்துவிட்டது எனக் கூறுகிறாள்?

1. புழக்கடைத் தோட்டத்தில் உள்ள குட்டையில் (வாவி) உள்ள செங்கழுநீர் மலர்கள் விரிந்து விட்டன. ஆம்பல் மலர்கள் குவிந்து விட்டன. காலையில் செங்கழுநீர் மலரும். மாலை வந்தால் அவை கூம்பும். மாலையில் ஆம்பல் மலரும், காலைக் கதிரைக் கண்டவுடன் அவைக் கூம்பும். "செங்கழுநீர் மலர்ந்ததையும், ஆம்பல் கூம்பியதையும் பார்" என்கிறாள்.

2. காவி உடை உடுத்தியவரும், வெண்ணிறப் பற்கள் உடையவருமான அடியார்கள்,கோயிலுக்குச் செல்கின்றனர். அங்கு சென்று சங்கை ஊதுவார்கள்.

இவ்வாறு கூறிவிட்டு, இன்னொரு தகவலைத் தருகிறாள். " 'நாளை உங்களை எழுப்புகிறேன்' என்று கூறிய நீ, இன்னும் எழாது இருக்கிறாயே? வார்த்தை தவறிவிட்டோம் என்ற நாணம் இல்லாத நாக்கினை உடையவளே" என்று, அந்தப் பெண்ணை அழைத்து, "எழுந்திராய்" என்கிறாள்.

பின்னர், "சங்கும் சக்கரமும் கையில் கொண்டுள்ள தாமரைக் கண்ணனைப் பாடுவோம் வாருங்கள்" என்று அழைக்கிறாள்.

kOthaimozhi kOlamozhi - 14

14.
ungaL puzhakkadai thOttatthu vAviyuL
chengazhuneer vaai negizndhu aambal vaai koombinagaan
sengal podi koorai veN pal thavatthavar
thangaL thirukkoyil sangiduvaan pOthandraar
engaLai munnam ezhuppuvaan vaai pEsum
nangaai ezhundhiraai naanaadhaai naavudaiyaai
sangodu chakkaram yEnthum thadakkaiyyan
pangayak kaNNaanai paadu yEl Or empAvAi

In this song, Andal says the night is gone and the daylight has come by quoting the lotus (sengazhuneer) has bloomed (vaai negizndhu) and lily (aambal) has closed its petals (vaai koombina). Lily will be open in the evening on seeing the moon and lotus will be open on seeing the sun.

The saints (thavatthavar) who wear red clothes (sengal podi koorai) and who have white teeth (veN pal) are going (pOdhandhaar) to the temple (thirukkoyil) to blow the conch (sangu).

There is another information regarding this girl. She has promised to wake up others (engalai munnam ezhuppuvaan vaai paesum nangaai), but she has not yet done. She is still asleep. So AndAl calls her nANAthaai naavudaiyaai (the one who doesnt feel ashamed for having not kept up the words).

Please wake up and let us sing the fame of the lord who is lotus eyed (pangaya kannan) who has conch (sangu) and disc (chakkaram) on his hands (thadakkaiyan).

Friday, August 24, 2018

திருப்பாவை பாடல் 13 - Tiruppaavai Song 13

கோதைமொழி கோலமொழி - 13

13.
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்நாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில், ஸ்ரீ மந் நாராயணனின் அவதார செயல்களைப் பாடித் தொடங்குகிறாள்.

புள்ளின் வாய் கீண்டான் - பறவை (புள்) - கொக்கின் வடிவில் வந்த பக்காசுரனை, அவனது வாயைப் பிளந்து கொன்றான் கண்ணன்.
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தான் - இந்த இடத்தில் அரக்கன் என்பது பொதுவாக ராக்ஷசர்களைக் குறித்தாலும், கிள்ளிக் களைந்தான் என்ற பதம், நரசிம்ம அவதாரத்தைக் குறிப்பதாக பெரியோர்கள் கூறுவார்கள். நகத்தால், ஹிரண்யகசிபுவின் வயிற்றைக் கிழித்து, நரம்புகளை மாலையாக அணிந்த நரசிம்மனையே இவ்விடம் குறிக்கும். அதுவே பொருத்தமானது.

இப்படிப்பட்ட வீரனான, திருமாலின் கீர்த்தியைப் பாடிக்கொண்டே நம் தோழிகள் யாவரும், பாவை நோன்பு மேற்கொள்ளும் இடம் (கோயிலை) அடைந்துவிட்டனர்.

பொழுதும் விடிந்து விட்டது என்பதை, இங்கு இரண்டு விஷயங்களைக் கூறி, நமக்குத் தெளிவுபடுத்துகிறாள்.

1. வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று - சுக்கிரன் வானத்தில் தெரிகிறான். சுக்கிரன் இருளிலும் தெரியும், விடியலிலும் தெரியும். பிரகாசமான கோள் என்று நாம் படித்துள்ளோம். வியாழன் என்பதும் ஒரு கோள். அது இரவில் மட்டும் தான் தெரியும். விடிந்தவுடன் நம் கண்ணுக்குத் தெரியாது. வெள்ளி என்பது ஒளியாகவும், வியாழன் என்பதை இருளாகவும் சிலர் சொல்லுவார்கள். கிழமையின் படி, அவள் பாடுகிறாள் என்றும் கற்பனையாகக் கொண்டாலும் சரியாக வரும். வியாழக் கிழமை முடிந்து, வெள்ளிக்கிழமை வந்துவிட்டது.

2. புள்ளும் சிலம்பின காண் - "பெண்ணே, பார், பறவைகளும் ஒலி எழுப்பத் தொடங்கிவிட்டன"

இங்கு, அந்தப் பெண்ணை, "போதரிக் கண்ணினாய்" என்று அழைக்கிறாள். போது அரிக் கண்ணினாய் - என்றால், போது - மலர். அரிதல் - அழித்தல். மலரின் அழகை ஈடழிக்கக் கூடிய கண்கள் உடையவளே என்று பொருள்.

"பெண்ணே (பாவாய்), உடம்பில் குளிரேறும்படி நீராடாமல், இன்னும் படுத்துக் கொண்டிருக்கிறாயே? தனியே உள்ளே படுத்துக்கொண்டு, கண்ணனை நீ மட்டும் நினைத்துக்கொண்டிருக்கிறாயோ? அவ்வாறு செய்யாமல் (கள்ளம் தவிர்ந்து), எங்களோடு சேர்ந்து வருவாய் (கலந்து)."

kOthaimozhi kOlamozhi - 13

13.
puLLin vAi keendAnai; pollA arakkanai
kiLLik kaLaindhAnai; keerthi mei paadippOi
piLLaigaL ellaarum pAvai kaLam pukkAr
veLLi ezhundhu viyAzhan uRangitRu
puLLum silambina kAN pOdhari kaNNinaai
kuLLak kuLirak kudaindhu neerAdAthE
paLLik kidatthiyO paavaai nee nannaaLaal
kaLLam thavirndhu kalandhu yEl Or empAvAi

In this song too, the importance of every one joining together and singing is told (kalandhu). She is asking to shed all ill feelings (kaLLam thavirndhu). There should not be any sort of ego among the devotees. All should stay united forever.

Andal is asking the girl (pOdhari kanninaai - the one who has eyes like petals of a flower) whether she is still laying on the bed  (paLLi kidatthiyO) without going for bath in the cool water (kuLLak kuLirndhu kudaindhu neer aadaathe). She then says, the dawn has come in 3 ways.

1. the birds have started to chirp (puLLum silambina kaan),
2. all (piLLaigaL ellaarum) have entered the temple (paavai kaLam pukkaar) and have started to sing the songs on the lord who killed the bird (crane - bakkaasuran) by opening its mouth wide and who killed the asuras (kamsa, sishupala, hiranya kasipu, ravanan)
3. the jupiter has set (viyAzhan uRangitRu) and venus rose (veLLi ezhundhu). Venus is the brightest planet. It will be visible to our eyes even in dawn. But jupiter will be seen only in darkness. Some say that jupiter symbolises darkness and venus symbolises brightness. Or, if we consider in terms of days, Thursday (jupiter/viyazhan) has ended and Friday (velli or venus) has started.

Thursday, August 23, 2018

திருப்பாவை பாடல் 12 - Tiruppaavai Song 12

கோதைமொழி கோலமொழி - 12

12.
கனைத்து இளம்கற்று எருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்று பால்சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றிச்
சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேர் உறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடல், ஆயர்பாடியில் உள்ள பசுக்கள், எருமைகளின் ஆரோக்கியத்தைச் சொல்லுகிறது. அவற்றின் மடியில், பால் மிகுந்து காணப்படுகிறது. பால் நிறைய சுரப்பதால், அவற்றின் மடி பாரம் தாங்க முடியாமல், அவை கத்துகின்றன (கனைத்து என்ற சொல் இதனையே குறிக்கும்). எவரேனும் வந்து பாலைக் கறப்பார்களா? என்று காத்திருக்கின்றன. பசுவானது, தன் கன்று வந்து முட்டிக் குடித்தால், அதன் மடியில் பால் சுரக்கும். எருமையானது, தன் கன்று, தன்னிடம் வந்து பால் குடிக்கிறது என்று நினைத்தாலே பால் சுரக்கத் தொடங்கிவிடும். அதனைத் தான், "கனைத்து இளம்கற்று எருமை, கன்றுக்கு இரங்கி, நினைத்து முலை வழியே நின்று பால் சோர" என்னும் வரிகள் குறிப்பிடுகின்றன.

அந்தப் பால், குடங்களைத் தாண்டி வழிந்து, வீடு முழுவதிலும் ஓடுகிறது. இல்லத்தை நனைத்து சேறாக்குகிறது. அப்படிப்பட்ட கறவை இனங்களை மேய்க்கும் செல்வனின் தங்கையே என்று இப்பெண்ணை ஆண்டாள் அழைக்கிறாள்.

மார்கழி மாதம் ஆதலால், பனித்துளிகள் இவர்கள் தலை மீது விழுகின்றன. அதனையும் பொருட்படுத்தாது, இவர்கள், இந்தப் பெண்ணின் வீட்டின் முன் நின்றுகொண்டு அழைக்கின்றனர்.

"கோபத்தால், இலங்கையை ஆண்ட அரசன் இராவணனை வென்றவனும், மனத்திற்கு இனியவனுமான பெருமானின் பெருமைகளைப் பாட நீ வருவாய். இப்போதாவது எழுந்துக்கொள். எதற்காக இப்படி உறங்கிக்கொண்டிருக்கிறாய்? அக்கம் பக்கத்தில் உள்ளோர்கள் யாவரும் நீ உறங்குகிறாய் என்பதை அறிந்துக்கொண்டு விட்டனர். சீக்கிரம் வா" என்று பாடி முடிக்கிறாள்.

kOthaimozhi kOlamozhi - 12

12. 
kanaitthu iLam katRerumai kandRukku iRangi
ninaitthu mulai vazhiyE nindRu pAl sOra
nanaitthu illam sERAkkum naRchelvan thangAi
panitthalai veezha nin vaasal kadai patRi
sinatthinaal then ilangai kOmAnai chetRa
manatthukku iniyaanai pAdavum nee vaai thiRavaai
initthaan ezhundhiraai eethenna pEruRakkam
anaitthu illatthaarum aRindhu yEl Or empAvAi

This song portrays the prosperous cattle of Ayarpadi. The buffaloes and cows are rich in milk wrt quantity and quality. They could not bear with the weight in their breasts due to huge secretion of milk. They are giving sound in the morning so that someone will come and take milk out of them. This is told by the word "kanaitthu". The cows will give milk on seeing it's calf drinking milk from it. But the buffaloes will start to pour milk out of the breasts the moment it thinks of it's calf drinking the same. The word "ninaithu" explains it.

The buffaloes (erumai) with young calves (iLam katRu), took pity on the calves (kandRukku iRangi) and thought that it should feed them (ninaitthu). No sooner did the buffaloes thought, than the milk started to pour out (mulai vazhiyE nindru pAl sOra). This milk, floods the entire place (nanaitthu illam sEr Akkum). Oh! the sister of such a prosperous cow herd (naR chelvan thangAi), we are standing in front of your home with snow falling on our heads (pani thalai veezha nin vaasal kadai patRi). So please open the door and come soon.

Please come and sing (pAdavum nee vaai thiRavaai) the fame of the lord who punished (chetRa) the king of Lanka (then ilangai kOmAn) out of anger (sinatthinAl) and who is very pleasing to our mind (manatthukku iniyAn). Atleast from now onwards wake up (initthaan ezhundhiraai) . Why are you bound to such a long sleep (eethenna pEruRakkam). All in this village has come to know that we are standing in front of your house (anaitthu illatthaarum arindhelor empavai).

Wednesday, August 22, 2018

திருப்பாவை பாடல் 11 - Tiruppaavai Song 11

கோதைமொழி கோலமொழி - 11

11.
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்
குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

இப்பாடலில், ஆண்டாள், ஆயர்களை வர்ணித்துத் தொடங்குகிறாள். பசுக்களைப் பாதுகாத்து, அவற்றிலிருந்து பால் கறப்பவர்களும், விரோதிகளின் வலிமையை அவர்களிடத்திற்கே சென்று வெல்பவர்களும், எவ்வித குற்றமும் இல்லாதவர்களுமான கோவலர்கள் குலத்தில் பிறந்த, கொடி போன்றவளே என்று, உள்ளே உறங்கிக்கொண்டிருக்கும் பெண்ணை அழைக்கிறாள்.

அடுத்து, அப்பெண்ணின் கழுத்து எப்படி இருக்கிறது என்றால், புற்றில் உள்ள விடப்பாம்பின் கழுத்து போல் ஒளி நிறைந்ததாகவும், சோலையில் வாழும் மயிலின் கழுத்து போல் அகலமாகவும் இருக்கிறது என்கிறாள். "பெண்ணே, நம் தோழிகள் யாவரும், உன் வீட்டின் முற்றத்தில் புகுந்து, மேகத்தைப் போன்ற நிறமுள்ள கண்ணபிரானின் புகழைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாடல்களைக் கேட்டும் கேட்காதவாறு அசையாமலும் (சிற்றாதே), பேசாமலும் (பேசாதே) எதற்காக உறங்கிக் கொண்டிருக்கிறாய் என்று புரியவில்லை (எற்றுக்கு உறங்கும் பொருளேல்). எழுந்து வா!" என்கிறாள்.

kOthaimozhi kOlamozhi - 11

11.
katRuk kaRavai kaNangal palakaRandhu
setRAr thiRalazhiyach chendRu cheRu seyyum
kutRam ondRillAtha kOvalar tham poRkodiyE
putRaravu algul punamayilE pOntharAi
sutRatthu thOzhimAr ellArum vandhu nin
mutRam pugundhu mugil vaNNan pEr pAdi
chitRAdhey pEsadhEy selva peNdAtti nee
etRukku uRangum parisu yEl Or empAvAi

In this song, Andal asks the girl (poRkodi), who is still sleeping inside (etRukku uRangum) her room even after the arrival of all her friends (sutRatthu thOzhimAr) in front of her house, to respond. She says, all have entered the girl's home and are waiting in the waiting room (mutRam pugundhu). There is no use in sleeping even after hearing all others singing the fame of the lord who is as dark as the clouds (mugil vaNNan pEr pAdi). Andal describes the girl, sleeping inside, as the one whose throat is as shining as a snake's throat with poison in it (putRaravu algul) and neck as broad as a peacock living in a garden (puna mayil). punam means garden

In this song, She also describes the people of Ayarpadi (kOvalar) - the one who tends the cattle and extract milk from them (katRuk kaRavai kaNangal palakaRandhu), the one who nullifies the strength of the enemies (setRAr thiRalazhiyach) and fights against them by going to their place (chendRu cheRu seyyum) and the blemishless ones (kutram ondru illaatha).

Tuesday, August 21, 2018

திருப்பாவை பாடல் 10 - Tiruppaavai Song 10

கோதைமொழி கோலமொழி - 10

10.
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன், நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்; பண்டுஒருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?!
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

இந்தப் பாட்டில், கேலியாக ஆண்டாள் ஆரம்பிக்கிறாள். "நோன்பு நோற்று, சுவர்க்கம் புக இருக்கும் பெண்ணே!" என்கிறாள். ஒருவர் மிகவும் மெதுவாக ஒரு செயலைச் செய்தால், "அவர் ரொம்ப சீக்கிரம் பண்ணிடுவார்" என்று சொல்வோம் அல்லவா? அதேபோல, இப்பெண்ணை ஆண்டாள் கூறுகிறாள்.

அடுத்து, "வாசற்கதவைத் தான் எழுந்து வந்து திறக்கவில்லை, ஒரு வார்த்தையாவது கூறக் கூடாதா?" என்கிறாள்.

மணமிகு துளசியை தன் மேனியில் அணியும் நாராயணனை நாம் பாடினோமானால், நமக்கு அவன் பறையைத் தருவான். புண்ணியத்தின் முழு உரு அவனே.

இவ்வாறு ஆண்டாள் பேசிக்கொண்டிருந்தும், அதைக்கேட்டு எழுந்து வரவில்லை அப்பெண். ஆதலால் ஆண்டாள் இவ்வாறு கூறுகிறாள். "முன்பொருநாள், தூக்கத்தின் கண், கட்டுண்டு விழுந்த கும்பகர்ணனும், உன்னிடத்தில் தோல்வியுற்று, பரிசாக, அவனது தூக்கத்தையே தந்தானோ? மிகுந்த தூக்கம் உடைய பெண்ணே, தெளிந்து எழுந்து வா".
என்று கூறி முடிக்கிறாள்.

kOthaimozhi kOlamozhi - 10

10.
nOtRu chuvarggam pugugindra ammAnAi!
mATRamum thArArO vAsal thiRavAdhAr
nATRa thuzhAi mudi nArAyaNan, nammAl
pOtRa, paRai tharum puNNiyanAm; paNdorunAl
kootRatthin vAi veezndha kumbakaraNanum
thOtRum unakkE perunthuyil thaan thandhaanO
AtRa anandhal udaiyaai arungalame
thEtRamaai vandhu thiRavu yEl Or empAvAi

In this song, Andal asks the ones who has not yet opened the doors to atleast speak a word with them as a response (mAtramum thaaraaro vaasal thiravaathaar). She calls them as the one who are going to enter the svarga lOkham by following the nOnbu (sarcastic comment).

Then she says the lord narayana who wears the tulsi garland will grant us boons if we sing His fame. He is the abode of good deeds (puNNiyan).

Now she recalls Rama avatar time. Once upon a time there was an asura named kumbakaraNa who is well known for sleep (kootRatthin vaai veezndha kumbakarananum). Saying so, Andal kids the girl sleeping inside the home that kumbakarana has lost to her in terms of sleep and gave his portion of the sleep also to her as a reward! (thOtrum unakke perunthuyithaan thandhaano).

Then she asks that girl with huge amount of sleep (aatRa ananthal udaiyaai arungalamE) to wake up (thEtRamaai vandhu) and open the door (thiRavu).

Monday, August 20, 2018

திருப்பாவை பாடல் 9 - Tiruppaavai Song 9

கோதைமொழி கோலமொழி - 9

9.
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்
தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்
மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்
ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.

இப்போது, அடுத்த வீட்டிற்கு வந்துவிட்டார்கள். இது சற்றே பெரிய, அழகிய வீடு. எவ்வளவு அழகாக, நம் கண் முன் ஆண்டாள் படம் பிடித்துக் காட்டுகிறாள்!

மாடம் நிறைந்த வீடு. அழகாக வண்ணம் தீட்டப்பட்டு, தூய்மையாக உள்ளது. விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது. சாம்பிராணி புகை பரவி, வாசம் கமழ்கிறது. துயிலணையில் அப்பெண், படுத்து உறங்குகிறாள். "மாமான் மகளே" என்று ஆண்டாள் அப்பெண்ணை அழைக்கிறாள். நம் நாட்டில், அக்கம் பக்கம் உள்ளோரை மாமா என்றும் மாமி என்றும் தான் அழைக்கும் வழக்கம். இதில் ஒருவிதமான சூட்சுமம் இருக்கிறது. மாமன் என்று நம் தாயின் உடன் பிறந்தோரை அழைப்போம். அப்போது எப்படி ஆகிவிடுகிறது? நம் தந்தையைத் தவிர மற்ற ஆண்கள், நம் தாயின் சகோதரர்கள். அதே போல, பெண்களை மாமி / அத்தை என்று அழைப்போம். நம் தந்தையின் உடன் பிறப்புகள் என்றவாறு.

அப்பெண்ணிடம், ஆண்டாள், மணிக்கதவம் திறவாய் என்று கேட்கிறாள். பின்னர், குரல் எதுவும் வரவில்லை. அதனால், அப்பெண்ணின் தாயை, "மாமி! உன் மகளை எழுப்புங்கள். அவள் என்ன ஊமையா? பேசாமல் இருக்கிறாளே? அல்லது காது கேளாதவளோ? இன்னும் எழுந்து வரவில்லை! அல்லது ஏதேனும் மந்திரத்தால் ஆட்கொள்ளப்பட்டாளோ?" என்கிறாள்.

முடிவாக, ஆண்டாள் சொல்வது, "பெரிய மாயையை நிகழ்த்துபவன், மகாலக்ஷ்மியின் நாயகன் (மா தவன்), வைகுந்தத்தில் வசிப்பவன் என்றெல்லாம் பல நாமங்களை நாம் நிதமும் சொல்லுவோம்."

நாம சங்கீர்த்தனமே திருப்பாவையின் கரு. 

kOthaimozhi kOlamozhi - 9

9.
thoomaNi mAdatthu sutRum viLakku eriya
thoomam kamazha thuyil aNai mEl kaN vaLarum
mAmAn magaLe maNikkadhavam thAzh thiRavAi
mAmeer avLai ezhuppeerO um magaL thaam
oomaiyO? andri chevidO? ananthalO?
yEmap perunthuyil mandhira pattAlO
mAmAyan mAdhavan vaikunthan endRendRu
nAmam palavum navindRu yEl Or empAvAi

Now, Andal wakes up another girl who is in deep sleep even after their repeated calls. She describes the house infront of which they are standing now. Its a multi storeyed house, neatly painted and illuminated (thoomaNi mAdam, sutrum viLakku eriya). Inside the house, the aroma of dhoop sticks is spreading. The girl is sleeping on a pillow (thuyil aNai mEl kaN vaLarum). Andal addresses this girl as her uncle's daughter. Its a customary to call the neighbours as uncle (mAmA) and aunt (mAmi). She asks this girl to open the beautiful door. Since there was no response, Andal calls the girl's mother (mAmi) and asks her to wake her up. Andal also asks if the girl is dumb or deaf or under the influence of any mantra. Finally she tells all of us to chant the names (nAmam palavum navindRu) of the supreme mAyan (brother of yOga mAyA), mAdhavan (mA is Lakshmi. consort of Lakshmi), dweller of vaikunta.

Nama sankeerthanam is the core of tiruppAvai.