பாடல் 7
காயுடை நெல்லொடு கரும்பு அமைத்துக்
..கட்டி அரிசி அவல் அமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால்
..மன்மதனே உன்னை வணங்குகின்றேன்
தேய முன் அளந்தவன் திரிவிக்கிரமன்
..திருக்கைகளால் என்னைத் தீண்டும்வண்ணம்
சாயுடை வயிறும் என் தடமுலையும்
..தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே
மன்மதனே, காய்கள் காணப்படுகின்ற பசுமையான நெல், கரும்பு, கரும்புக்கட்டி (வெல்லம்), அரிசி, அவல் இவற்றைக் கொண்டு சுவையான பதார்த்தத்தைச் சமைத்து, உனக்குப் படைத்து, நல்ல வாக்குடைய வேதம் ஓதும் அந்தணர்கள் மந்திரம் சொல்ல, உன்னை வணங்குகின்றேன். தேய என்றால் உலகம். தேசம் என்பதை தேயம் என்றும் கூறுவார். உலகை முன்பொருநாள் அளந்தவனான திரிவிக்ரமன் தன் திருக்கைகளால் எனது ஒளியுடைய (சாயை என்றல் ஒளி; மரகத சாயே என்று மீனாட்சியை ஸ்ரீ தீட்சிதர் பாடுவார்) வயிற்றையும், மென்மையான பருத்த முலைகளையும் தீண்டும் வண்ணம் நீ செய்ய வேண்டும். அவ்வாறு செய்து, எனக்கு அப்பேறு கிட்டினால், இவ்வுலகில் நான் மிகுந்த புகழோடு இருப்பேன்.
Song 7
kaayudai nellodu karumbu amaitthu
..katti arisi aval amaitthu
vaayudai maRaiyavar mandhiratthaal
..manmadhanE unnai vaNangugindREn
thEya mun aLandhavan thirivikkiraman
..thirukkaigaLaal ennaith theeNdum vaNNam
chaayudai vayiRum en thadamulaiyum
..tharaNiyil thalippugazh tharakkitRiyE
Oh Manmadha, I prepared a dish made out of fresh paddy (kaai udai nel), sugarcane (karumbu), jaggery (karumbu katti - sugarcane cubes), rice (arisi), rice flakes (aval) and offered it to you along with the mantras (manthiratthaal) chanted by vedic scholars. You need to make lord Trivikrama who measured (mun aLandhavan) the whole world (thEyam = thEsam) with his feet, to embrace (theendum vannam) my stomach (vayiru) and breasts (thada mulai) with His hands (thirukkaigaLaal) and accept me. If this happens, then I will live in this world with never evading fame.

No comments:
Post a Comment