கோதைமொழி கோலமொழி - நாள் 2
2.
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்
இந்தப் பாடலில், பாவை நோன்பிற்கான நெறிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது.
உலகில் வாழும் மக்கள் யாவும், பாவை நோன்பின் போது நாம் செய்ய வேண்டியவன / தகாதன வற்றைக் (கிரிசைகள் = கிரியைகள் [க்ரியை] கேளுங்கள் என்கிறாள் ஆண்டாள்.
1. பாற்கடலில் துயிலும் (அறிதுயில் அல்லது யோக நிஷ்டையில் இருக்கும்) பரமனின் திருவடிப் புகழைப் பாட வேண்டும். கீர்த்தனம் என்னும் ஒன்பது வகை பக்திகளுள் ஒன்றைப்பற்றி மிகவும் சொல்லக்கூடிய நூல் - திருப்பாவை. திருவடியை ஏன் பாட வேண்டும்? பெரியோர்கள் சொல்வது என்னவென்றால், நாம் பரமனின் கால்களைப் பற்றிக்கொண்டோம் என்றால் அவனால், நம்மை விட்டுப் பிரிந்து போக முடியாது. ஆதலால்தான் இறைவன் தாளைப் பிடி, அடியைப் பற்றுக என்றெல்லாம் சொல்கிறார்கள்.
2. அடுத்து, நெய், பால் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றை அதிகமாக உண்டால், உடல் உபாதைகள் வர வாய்ப்பு அதிகம். உடல் நலம் இல்லாவிட்டால், இறைவன் மேல் நம் மனம் செல்லாது.
3. நாட்காலே - நாள் காலையிலே - விடியலில் நீராட வேண்டும்.
4. மையிட்டு அலங்காரங்கள் செய்துகொள்ளக் கூடாது. அது நம் நேரத்தை விரயமாக்கும்.
5. மலர்களைச் சூடிக்கொள்ளல் கூடாது. மலர்கள் யாவும் இறைவனுக்கே அர்பணிக்க வேண்டும்.
6. செய்யக்கூடாதனவற்றைச் செய்யக்கூடாது. குறை, குற்றம் கூறக்கூடாது. புறம் சொல்லல் - தவிர்க்கப்பட வேண்டும்.
7. வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றைத் தர வேண்டும். அதில் எந்தத் தயக்கமும் இருக்கக்கூடாது.
இவற்றைக் கடைபிடித்து, நல்வழியில் வாழ்வோம் என்று சொல்லி ஆண்டாள், இப்பாடலை நிறைவு செய்கிறாள்.
kOthaimozhi kOlamozhi - Day 2
2.
vaiyatthu vAzhveergaaL naamum nam pAvaikku
cheyyum kirisaigaL kEleerO - paaRkadaluL
paiyyath thuyindra paraman adi paadi
neyyuNNOm pAluNNOm nAtkAlE neerAdi
mai ittu ezhuthOm malarittu nAm mudiyOm
seiyaathanach cheyyOm theekkuRaLai chendru OdhOm
aiyamum picchaiyum aandhanaiyum kaikAtti
uyyum aaRu eNNi ugandhu yEl Or empAvAi
In this song, Andal addresses the people living in the world (vaiyatthu vaazhveergaaL) to note down what they have to do during the paavai nOnbu. kirisai = kriyai (action). kEleero (please listen).
1. To sing the glory of the feet of the lord who sleeps (who is on deep meditation (yoga nishtai)) on the milky ocean. Why to sing the glory of the feet? Elders use to say we have to hold the lord's feet tightly. why not hands or head? The answer is simple. Only if we hold the feet tight, he cannot go any where.
2. Do not eat ghee or milk (this may upset our stomach and we may not be able to keep our mind on prayers)
3. Take bath in the early morning (naat kaalE - naaL kaalE - morning time of the day)
4. Do not put kAjal. (this may waste our time and our prayer time may get reduced)
5. Do not wear flowers. They are meant for the Lord.
6. Do not do the ones that are not meant to be done. (do what Vedas say)
7. Do not tell something bad about others and poison their mind. Avoid gossips.
8. Give without any hesitation (for poors and the needy and guests offer food they need)
Then she concludes by saying - follow these and think of how to lead a good life (it is only by singing His glory).

No comments:
Post a Comment