Sunday, August 19, 2018

திருப்பாவை பாடல் 8 - Tiruppaavai Song 8

கோதைமொழி கோலமொழி - 8

8.
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய
பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

ஆண்டாள் இப்போது ஒரு பெண்ணை அழைக்கிறாள். "கண்ணனிடத்தே ஆசைகள் நிறைய உடையதால், ஆனந்தம் மிகவுடைய பெண்ணே" என்கிறாள். [கோதுகலம் = கெளதுஹலம் / குதூகலம் = உள்ளக்களிப்பு]. ஏன் அந்தப் பெண்ணை இவ்வாறு அழைக்கிறாள்? நமக்கு, ஒருவரால் ஏதேனும் காரியம் ஆகவேண்டும் என்றால், நாம் கொஞ்சம் நல்ல வார்த்தை சொல்லி அவரிடம் அதைப் பெற்றுக்கொள்வோம் அல்லவா? அதே போல் தான் இங்கும்.

"கதிரவன் உதித்து, கிழக்கு வெளுத்துவிட்டது. எருமைகளை, அதன் கொட்டிலிலிருந்து விடுவித்து (வீடு என்றால் விடுதலை), புல்லை மேய விட்டுவிட்டார்கள். கோயிலுக்கு அனைவரும் கிளம்பிவிட்டனர். அவர்கள் யாவரையும் உன் வீட்டின் முன்பே நிறுத்திவைத்திருக்கிறேன். நீயும் சீக்கிரம் எழுந்து, எங்களோடு வா. ஒன்றாகச் செல்வோம்." இவ்வாறு, ஆண்டாள், அப்பெண்ணை, குழைய அழைக்கிறாள்.

குதிரையின் (கேசி என்னும் அசுரன்) வாயைப் பிளந்தவனை, முஷ்டிகன், சாணூரன் என்னும் மல்லர்களை அழித்தவனும், தேவர்களுக்கெல்லாம் தலைவனுமான நாராயணனை நாம் சென்று சேவித்தால், நமக்கு அவன் ஆராய்ந்து அருளுவான். அது என்ன ஆராய்ந்து அருளல்? உலக நன்மைக்காக வேண்டினால், உடனே தந்துவிடுவான். இல்லாவிட்டால், லௌகீகமான வேண்டுதல்களை, வேண்டுவோருக்குப் பார்த்துத்தான் தருவான்.

kOthaimozhi kOlamozhi - 8

8.
keezh vaanam veLLendru erumai siRuveedu
mEivAn parandhana kAN; mikkuLLa piLLaigaLum
pOvaan pOgindRaarai pOgAmal kAtthu unnai
koovuvAn vandhu nindrOm kOthu kalamudaiya
pAvAi ezhundhirAi paadi paRai koNdu
mAvAi piLandhAnai mallarai maattiya
dEvAdi dEvanai sendRu nAm sEvitthAl
AavAvendru Araaindhu aruLEl Or empAvAi

In this song, Andal asks the girl who is sleeping inside the house. She addresses her as the one who has affection towards Lord Krishna (kOthu kalam udaiya pAvAi; kOthukalam - became kuthookalam). Why does Andal addresses the girl who is sleeping inside very affectionately? We do today right? If we want something to be done, we cajole someone. The same reason. She wants her to come out. So calling her with big adjectives. The eastern side is lit up with the rise of the sun. The buffaloes have started to graze on the fields. Andal says that she stopped all others who are heading towards to the temple and made them assemble in front of this girl's home and they are waiting for her arrival. This emphasises the importance of going together to the temple or yatra. Satsangam's importance is being told here.

She then asks her to sing the fame of the Lord (dEvAdi dEvan) who opened (piLandhaanai) the mouth of a devil in the form of horse (mA vAi) and killed him (kEsi) and who fought with the wrestlers (mallar) at Mathura. She then asks her to go and worship the lord. If we worship Him, He will bless us according to the nature of our mind. If we ask for the welfare of others, he will immediately grant. Otherwise he will think and act accordingly. (aaraaindhu aruLal)

Saturday, August 18, 2018

திருப்பாவை பாடல் 7 - Tiruppaavai Song 7

கோதைமொழி கோலமொழி - 7

7.
கீசுகீசு என்றுஎங்கும் ஆனைச்சாத் தன்கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறும்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ
நாயகப் பெண்பிள்ளாய் நாரா யணன்மூர்த்தி
கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ
தேச முடையாய் திறவேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில், ஆண்டாள், மற்றொரு பெண்ணை எழுப்புகிறாள். முதலில், கோபமாக "பேய்ப் பெண்ணே" என்று அழைக்கிறாள். பேய் என்றால் இங்கு அறிவு மழுங்கிய என்று பொருள். "ஆனைச்சாத்தன் என்னும் பறவைகள் ஒன்றோடு ஒன்று கலந்து பேசத் தொடங்கிவிட்டன. அந்தப் பேச்சின் சத்தம் கேட்கவில்லையா?" என்று கேட்கிறாள்.

ஆய்ச்சிமார்கள், காலை வேளையில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். தயிர் கடையும் போது, அவர்களது மாங்கல்யம் (காசு - ஆமைத்தாலி, பிறப்பு - அச்சுத் தாலி)  அசைந்து அசைந்து ஓசை எழுப்புகின்றன. மணம் நிறைந்த கூந்தலை உடையவர்கள் என்று ஆய்ச்சிமார்களின் கூந்தலை, ஆண்டாள் வர்ணிக்கிறாள்.

சூர்யோதயத்திற்கு முன்னமே தயிர் கடைந்து, வெண்ணெயை எடுத்துவிட வேண்டும். சூர்யன் உதித்த பின், வெண்ணெய் உருகிவிடும். அதனால், சூரிய உதயத்திற்கு முன்னமே வெண்ணெய் எடுத்துவிடுவார்கள்.

இப்போது கோபம் சற்று குறைந்து, "நாயகப் பெண் பிள்ளாய்" என்று அப்பெண்ணை அழைக்கிறாள். "நாராயணன், கேசவன் எனப்படும் பரமனைப் பற்றி நாங்கள் பாடத் தொடங்கிவிட்டோம். அதனைக் கேட்டும் நீ இன்னும் படுக்கையில் படுத்துக்கொண்டிருக்காதே. அழகு நிறைந்தவளே, எழுந்து வா" என்கிறாள்.

kOthaimozhi kOlamozhi - 7

7.
keesu keesu endru engum aanaich chaatthan kalandhu
pEsina pEcchu aravam kEttilaiyO? pEi peNNE!
kAsum piRappum kalakalappa kaipErtthu
vAsa naRunkuzhal Aichiyar matthinaal
Osai paduttha thayir aravam kEttilayO?
nAyaga peN piLLAi nArAyaNan mUrthy
kEsavanai pAdavum nee kEttE kidatthiyO
thEsam udaiyaai thiRavu yEl Or empAvAi

Andal now wakes up a girl who is still in her bed, even after hearing the sound made by Aanai chaatthan birds. She also says to her, "the ladies in the home of herds (yadhukulam) have started to churn the curd to take butter out of it. Even after hearing that churning sound, are you still asleep? Also when they are churning, the mangaL sUtra worn by them kAsu (acchu thAli) and piRappu (Aamai thAli) do make the sound. Everyone has started to sing the praise of Lord Narayana, kesava. Even after listening to that sound, are you still laying on the bed? Please come and open the door oh! beautiful girl."

Why should the curd be churned in the morning, before sun rise? After sun rise, if you churn the curd and take butter, the butter will melt. So it was a practice to take butter before sun rise.

The morning scene in Ayarpaadi is very well described in this song as well as in upcoming songs.

Friday, August 17, 2018

திருப்பாவை பாடல் 6 - Tiruppaavai Song 6

கோதைமொழி கோலமொழி - 6


6.
புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ
பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில், ஆண்டாள், அவளது தோழி ஒருத்தியை எழுப்புகிறாள். புள் (பறவை) ஒலி எழுப்பிற்று, கருடனின் மேல் அமரும் அரசனான ஸ்ரீ மந் நாராயணனின் கோயிலில் சங்கினை முழங்கி விட்டார்கள். அந்த சத்தமானது பொழுது புலர்ந்தது என்பதை அறிவித்துவிட்டது. அதைக் கேட்ட பின்னும் நீ இன்னும் எழுந்திருக்க மாட்டேன் என்கிறாயே?

பேய்முலை (பூதனையின்) முலையிலிருந்து வந்த விடத்தை உண்டவனும்,
தன்னைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்த சகடாசுரனைக் (கள்ளச் சகடம்) காலால் உதைத்தவனும்,
பாற்கடலில் பாம்பின் மேல் அறிதுயிலும் வித்தானவனுமான (அனைத்துக்கும் முதலானவன்)

ஸ்ரீ மந் நாராயணனின் நாமமாகிய "ஹரி' என்பதை, தங்கள் உள்ளத்தில் வைத்துக்கொண்டு, முனிவர்களும், யோகியர்களும் தங்கள் படுக்கையை விட்டு மெதுவாக எழுந்து, மெல்லிய குரலில் "ஹரி" என்று சொல்லி ஆகிவிட்டது. அந்த ஹரிநாமம், நம் உள்ளத்தின் உள்ளும் புகுந்து, அதனை குளிர்வித்துவிட்டது. அதனால், இனியும் தாமதியாது, எழுந்திருப்பாய் என்று பாடுகிறாள்.

எதற்காக மெதுவாய் எழ வேண்டும்? நம் உள்ளத்தில் இறைவன் இருக்கிறான். நாம் வேகமாக எழுந்தால், 'அவனுக்கு ஏதேனும் அடிபட்டுவிட்டால் என்ன செய்வது?" என்ற பாசத்தால் தான் என்று பெரியோர்கள் சொல்வார்கள். தெய்வத்திடம் முழுமையான நம்பிக்கை வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இப்பாடல்.


kOthaimozhi kOlamozhi - 6

6.
puLLum silambina kAN; puLLaraiyan kOyilil
veLLai viLi sangin pEraravam kEttilaiyO?
piLLAi yezhundhirAi; pEi mulai nanju uNdu,
kaLLa chagadam kalakkazhiya kAlOcchi,
veLLatthu aravil thuyil amarndha vitthinai
uLLatthu koNdu munivargaLum yOgigaLum
meLLa yezhundhu Hari endra pEraravam
uLLam pugundhu kuLirndhu yEl Or empAvAi

Andal wakes up one of her friends here. She says, the birds have started chirping. The temple of Sri Narayana (puL + araiyan - god mounted on Garuda) is now open and they are blowing the conch. Have you not heard that sound? Please wake up.

The saints and yOgis have slowly raised (meLLa yezhundhu) from their beds. The sound of Hari namam made by them has entered in our heart through the ears and made us happy. Who is this Hari? The one who drank the poisonous milk from the wicked Bhoothana's breast and killed her; the one who kicked off chagadAsura with His tender feet; the one who sleeps on the serpant on the sea. This Hari is in the heart of yogis and saints.

Why should we get up slowly? It is because of the firm belief that the Lord is within our heart. If we raise up fast, then it will disturb Him. He may hit the membranes of our heart which will hurt him. Such a kind of belief should be with us.

Thursday, August 16, 2018

திருப்பாவை பாடல் 5 - Tiruppaavai Song 5

கோதைமொழி கோலமொழி - 5

5.
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்று அனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்

இந்தப் பாடலில், நாராயணனைப் பாட வேண்டும் என்று கூறுகிறாள். அவ்வாறு பாடினால், நமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பாடுகிறாள்.

நாராயணன் எப்படிப்பட்டவன்?

1. மாய லீலைகள் செய்யும் மாயன்
2. நிலைத்த புகழ் கொண்ட வடமதுரையில் தோன்றியவன்
3. தூய்மை நிறைந்த நீர் உடைய யமுனையின் கரையில் வசிப்பவன்
4. ஆயர்குலத்தில் தோன்றிய அழகு விளக்குப் போன்றவன். அக்குலத்தின் ஒளி.
5. தாயின் வயிறு விளங்கச் செய்தவன். கண்ணன், தேவகியின் வயிற்றிலிருந்து பிறந்ததால், தேவகிக்குப் பெருமை.

இப்படிப்பட்ட ஸ்ரீ மந் நாராயணனை, நாம் யாவரும், தூயவர்களாய் இருந்து, தூய மலர் தூவி (அர்ச்சனை), வாயினால் அவன் புகழைப் பாடி (கீர்த்தனை), மனத்தினால் அவன் நாமத்தையே நினைத்து (ஸ்மரணம்) இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், நமது மூவினையும் (சஞ்சித, பிராரப்த, ஆகமி) தீயில் இட்ட பொருள் எப்படி எரிந்து சாம்பலாகுமோ அவ்வாறு ஆகிவிடும்.

kOthaimozhi kOlamozhi - 5

5.
mAyanai mannu vadamadurai maindhanai
thooya peruneer yamunai thuraivanai
aayar kulatthinil thOndrum aNiviLakkai
thaayai kudal viLakkam seitha dAmOdharanai
thooyomAi vandhu naam thoomalar thoovi thozhudhu
vAyinAl paadi manatthinaal sindhitthu
pOya pizhaiyum pugutharuvaan nindranavum
theeyinil thoosaagum cheppu yEl Or empAvAi

In this song, Andal tells us that we need to sing the glory of Krishna, the one who covers the world with his illusionary power (maayan), the son of the virtous Mathurapuri (mannu vada madurai mainthan), the one who is on the banks of river yamuna whose water is very much pious, the radiant lamp of yadhu kulam, the one who gave fame to Devaki (as well as yasodha) by having them as His mother.

How to sing? By cleansing ourselves and offering pure flowers and then we need to sing and think about his fame. Here three out of nine types of Bhakti is covered - archanam, keertanam and smaranam.

If we sing his glory, what will happen? All our three karmaas will be burnt to ashes (theeyinil thoosaagum). pOya pizhai (sanchitam or accumulated), pugutharuvaan (praarabdham or the karmas to be done in this birth) and nindru (aagami or the karmaas that will accumulate in this birth to be done in future). 

Wednesday, August 15, 2018

திருப்பாவை பாடல் 4 - Tiruppaavai Song 4

கோதைமொழி கோலமொழி - 4

4.
ஆழி மழைக்கு அண்ணா! ஒன்று நீ கைகரவேல்.
ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துப்
பாழி அம் தோளுடைப் பற்பனாபன் கையில்
ஆழி போல்மின்னி, வலம்புரி போல் நின்று அதிர்ந்து,
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய். நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில், ஆண்டாள், மழைக்கு அதிபதியான வருணனை ஒன்று கேட்டுக்கொள்கிறாள்.
ஆழி மழைக்கு அண்ணா - பெரிய மழைக்கு அதிபதியே!
ஒன்று நீ கை கரவேல் - ஒன்று நீ செய்வாயாக

என்ன கேட்டுக்கொள்கிறாள்?

ஆழியின் உள்ளே (சமுத்திரத்துள்) புகுந்து (புக்கு), அந்த நீரை எடுத்து (முகந்து), மேகத்திடம் கொடுத்து விடு.

அவ்வாறு கொடுத்தால் என்னவாகும்?

பிரளய காலத்தின் போது, இருக்கும் பெருமான் போல், அந்த மேகங்கள், கருமையாகிவிடும். அதன் பின்னர், பெருமைமிகு தோள்களை உடைய பற்பநாபன் (பத்மநாபன்) கையில் திகழும் சக்கரம் போல், ஒளிமிகுந்த மின்னல்கள் தோன்றும். அந்த பத்மநாபனின் மற்றொரு கையில் இருக்கும் வலம்புரி சங்கு போல, பெரிய முழக்கம் கொண்ட இடி தோன்றும். அதற்குப் பின், அவன் கையில் உள்ள சார்ங்கம் என்னும் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல், மழை, இந்த மண்ணில் பொழியும். இவ்வாறு  மழையை நீ (வருணனே) கொண்டுவந்தாயானால், நாங்கள் நன்றாக வாழ்ந்து, பாவை நோன்பை எவ்வித தடங்களும் இன்றி, மகிழ்வோடு மேற்கொள்வோம்.

ஆண்டாளின் கற்பனையைப் பார்த்தீர்களா? மின்னல், இடி, மழை என எல்லாவற்றிலும் நாராயணனையே காண்கிறாள். மழை எப்படி உருவாகும், முதலில் மின்னல் வருமா அல்லது இடி வருமா போன்ற அறிவியல் உண்மைகளை இப்பாடலில் எளிதாக தெரிவித்துவிட்டாள்.

kOthaimozhi kOlamozhi - 4

4.
Azhi mazhaikku aNNA ondru nee kai karavEl
AzhiyuL pukku mugarndhu kodu aartthEri
Oozhi mudhalvan uravam pOl mei karutthu
pAzhi am thOLudaip paRpanAban kaiyil
Azhi pOl minni valampuri pOl nindru adhirndhu
thAzhathey sArngam udhaittha sara mazhaippOl
vAzha ulaginil peithidaai; naangaLum
mArgazhi neerAda magizhndhu yEl Or empAvAi

In this song, Andal addresses the rain god (Azhi mazhaikku aNNA - aNNA meaning God). She asks the rain god to do a favour for her.

What is the favour?
Get into the ocean (Azhi yuL pukku), and take the water (mugarndhu) and give (kodu) it to the clouds.

Then they will be dark (mei karutthu) like the lord of deluge (pralayam or oozhi mudhalvan uruvam pOl).

After that we will get lightning as bright as the disc on the hands (kaiyil) of Padmanabha who has beautiful shoulders (paazhi am thOl udai paRpanAban) and then

the thunder that sounds like the valampuri (conch or shanka).

After the lightning and thunder, we will get rain. How is it? It is like the arrows coming out of the lord's bow (sArngam).

She is asking the rain to come so that we will live in this world and pray to Him in margazhi month happily.

See the creativity of Andal. She has described the entire process involved in formation of rain. This is an evidence for us to say that our shashtras are the base to modern science. In that process, she associates each and everything with the Lord. This should be our mind set too. The entire universe is His creation. So we need to see Him in each and everything in this world.

Tuesday, August 14, 2018

திருப்பாவை பாடல் 3 - Tiruppaavai Song 3

கோதைமொழி கோலமொழி - 3

3.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

இந்தப் பாடலில், பாவை நோன்பு மேற்கொண்டு, நாராயணனின் நாமத்தைப் பாடினால், கிடைக்கும் நன்மைகளை ஆண்டாள் விளக்குகிறாள்.

முன்னொரு காலத்தில், மாவலியின் கர்வத்தை அடக்க, இரண்டடியாலே மூன்று உலகையும் அளந்த உத்தமானாம் ஸ்ரீ நாராயணனின் பெயரைப் பாடுவோமாகில்,

1. தீங்கு விளைவிக்காது, மாதம் தோரும் மூன்று முறை மழை பொழியும் (அறம் வழுவா அரசருக்கென்று ஒரு மழை, கற்புடைய பெண்களுக்கென்று ஒரு மழை மற்றும் வேதம் ஓதும் அந்தணருக்கென்று ஒரு மழை). தற்போது மழை பெய்து ஓரிடத்தில் தீங்கு விளைகிறது, மழை பெய்யாமல் ஓரிடத்தில் தீங்கு விளைகிறது. இதற்குரிய காரணம் புரிந்திருக்கும்.
2. வயல்களில், நெற்கதிர்கள் உயர்ந்து வளரும் (நிலவளம் பெருகும்)
3. நீர்நிலைகளில் மீன்கள் விளையாடும் (அப்படியெனில் நீர் வளம் மிகுந்திருக்கும்)
4. குவளைப் பூக்களில் வண்டுகள் எப்போதும் விளையாடிக் கொண்டே இருக்கும். தேன் குடித்து, மகரந்தத்தைப் பரப்பி, அதன் மூலம் நிறைய பூக்கள் பெருகும். சோலைகள் தழைத்து ஓங்கும்.
5. நீர், நில வளங்கள் இருந்தால், அதில் மேயும் பசுக்கள் நன்றாக ஆரோக்கியமாக இருக்கும். அதன் மடியில் அதிகப்படியான பால் சுரக்கும். குடங்களை நிரப்பிக்கொண்டே இருக்கும் அப்பசுக்கள். வள்ளல் பெரும் பசுக்கள்.

இவை நன்றாக இருந்தால், செல்வ வளத்திற்கா குறைவு? செல்வவளம் பெருகுவதோடு, அவை நீங்காமல் நிலைத்து இருக்கும் என்று பாடுகிறாள்.

பசுக்கள், விவசாயம், விவசாயம் செய்வோர், யாதவர்கள், நீர் நிலைகள், நிலங்கள், மரம், செடிகள் ஆகியவற்றை நாம் பாதுகாத்தோமானால், செழிப்புக்குக் குறைவே இருக்காது. பசுக்களிடமிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், கோமியம், சாணம் ஆகியவற்றைக் கொண்டு நல்ல முறையில் வேள்வி செய்துவந்தால், உலகம் நன்றாக இருக்கும்.

kOthaimozhi kOlamozhi - 3

3.
Ongi uLagaLandha utthaman pEr pAdi
nAngaL nam pAvaikku chAtRi neeraadinaal
theengindri nAdellAm thingaL mum mArip peithu
Ongu perum chennel oodu kayalugaLa
poonguvaLaip pOthil poRivaNdu kaN paduppa
thEngAdhey pukkirundhu seerttha mulai patRi
vAnga kudam niRaikkum vaLLal perum pasukkaL
neengaadha selvam niRaindhu yEl Or empAvAi

In this song, Andal tells us the way to get prosperity that never evades.

If we sing the name and fame of the supreme one (uttaman) who measured the world with His feet and follow the good practices as specified for pAvai nOnbu, then we get prosperity.

What are the benefits?

1. The world will get good spells of rain without affecting lives (theengindri naadellaam), thrice a month (thingaL mummaari) - It is said for the sake of a Good and Honest King one spell, for the sake of Brahmins who do their karmAs without fail one spell and for the sake of Women who are virgin another spell. From this we can understand the present state of rainfall is because of what. I leave the result to the reader.
2. The fields will be green with paddy and other grains that are well grown
3. Bees will be seen everywhere in the garden
4. Cows will give abundant milk and people will keep on filling pots after pots with milk.

Andal says if cows, farmers, lands and trees are protected the world will be full of prosperity. If you see, to perform yagna, cow's milk, urine, dung, curd and ghee from milk are needed. Rice is also needed. So perform yagna and then we will flourish. It is like a cycle. We put grains etc in agni and in return we get back prosperity. If we dont perform yagna, we will perish.

Monday, August 13, 2018

திருப்பாவை பாடல் 2 - Tiruppaavai Song 2

கோதைமொழி கோலமொழி - நாள் 2

2.
வையத்து வாழ்வீர்காள் நாமும்நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத் துயின்ற பரம னடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்
செய்யா தனசெய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

இந்தப் பாடலில், பாவை நோன்பிற்கான நெறிமுறைகள் சொல்லப்பட்டுள்ளது.

உலகில் வாழும் மக்கள் யாவும், பாவை நோன்பின் போது நாம் செய்ய வேண்டியவன / தகாதன வற்றைக் (கிரிசைகள் = கிரியைகள் [க்ரியை] கேளுங்கள் என்கிறாள் ஆண்டாள்.

1. பாற்கடலில் துயிலும் (அறிதுயில் அல்லது யோக நிஷ்டையில் இருக்கும்)  பரமனின் திருவடிப் புகழைப் பாட வேண்டும். கீர்த்தனம் என்னும் ஒன்பது வகை பக்திகளுள் ஒன்றைப்பற்றி மிகவும் சொல்லக்கூடிய நூல் - திருப்பாவை. திருவடியை ஏன் பாட வேண்டும்? பெரியோர்கள் சொல்வது என்னவென்றால், நாம் பரமனின் கால்களைப் பற்றிக்கொண்டோம் என்றால் அவனால், நம்மை விட்டுப் பிரிந்து போக முடியாது. ஆதலால்தான் இறைவன் தாளைப் பிடி, அடியைப் பற்றுக என்றெல்லாம் சொல்கிறார்கள்.

2. அடுத்து, நெய், பால் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றை அதிகமாக உண்டால், உடல் உபாதைகள் வர வாய்ப்பு அதிகம். உடல் நலம் இல்லாவிட்டால், இறைவன் மேல் நம் மனம் செல்லாது.

3. நாட்காலே - நாள் காலையிலே - விடியலில் நீராட வேண்டும்.

4. மையிட்டு அலங்காரங்கள் செய்துகொள்ளக் கூடாது. அது நம் நேரத்தை விரயமாக்கும்.

5. மலர்களைச் சூடிக்கொள்ளல் கூடாது. மலர்கள் யாவும் இறைவனுக்கே அர்பணிக்க வேண்டும்.

6. செய்யக்கூடாதனவற்றைச் செய்யக்கூடாது. குறை, குற்றம் கூறக்கூடாது. புறம் சொல்லல் - தவிர்க்கப்பட வேண்டும்.

7. வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றைத் தர வேண்டும். அதில் எந்தத் தயக்கமும் இருக்கக்கூடாது.

இவற்றைக் கடைபிடித்து, நல்வழியில் வாழ்வோம் என்று சொல்லி ஆண்டாள், இப்பாடலை நிறைவு செய்கிறாள்.

kOthaimozhi kOlamozhi - Day 2

2.
vaiyatthu vAzhveergaaL naamum nam pAvaikku
cheyyum kirisaigaL kEleerO - paaRkadaluL
paiyyath thuyindra paraman adi paadi
neyyuNNOm pAluNNOm nAtkAlE neerAdi
mai ittu ezhuthOm malarittu nAm mudiyOm
seiyaathanach cheyyOm theekkuRaLai chendru OdhOm
aiyamum picchaiyum aandhanaiyum kaikAtti
uyyum aaRu eNNi ugandhu yEl Or empAvAi

In this song, Andal addresses the people living in the world (vaiyatthu vaazhveergaaL) to note down what they have to do during the paavai nOnbu. kirisai = kriyai (action). kEleero (please listen).

1. To sing the glory of the feet of the lord who sleeps (who is on deep meditation (yoga nishtai)) on the milky ocean. Why to sing the glory of the feet? Elders use to say we have to hold the lord's feet tightly. why not hands or head? The answer is simple. Only if we hold the feet tight, he cannot go any where.
2. Do not eat ghee or milk (this may upset our stomach and we may not be able to keep our mind on prayers)
3. Take bath in the early morning (naat kaalE - naaL kaalE - morning time of the day)
4. Do not put kAjal. (this may waste our time and our prayer time may get reduced)
5. Do not wear flowers. They are meant for the Lord.
6. Do not do the ones that are not meant to be done. (do what Vedas say)
7. Do not tell something bad about others and poison their mind. Avoid gossips.
8. Give without any hesitation (for poors and the needy and guests offer food they need)

Then she concludes by saying - follow these and think of how to lead a good life (it is only by singing His glory).