Tuesday, February 5, 2019

நாச்சியார் திருமொழி 2.10 - nAchiyAr tirumozhi 2.10

பாடல் 10

சீதை வாயமுதம் உண்டாய்
..எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதிவாய் விளையாடும் ஆயர் சிறுமியர்
..மழலைச் சொல்லை
வேதவாய்த் தொழிலாளர்கள் வாழ்
..வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் தன்
கோதை வாய்த்தமிழ் வல்லவர்
..குறைவின்றி வைகுந்தம் சேர்வரே

சீதையின் அன்பிற்கு உரியவனான எம்பெருமானை, "எங்கள் சிற்றில் வந்து சிதையேல்" என்று ஆயர்பாடி வீதியில் விளையாடும் ஆயர்சிறுமியர் வாய் வழி வந்த மழலைச் சொற்களை, வேதம் ஓதும் அந்தணர்கள் வாழும் வில்லிபுத்தூரின் தலைவனான விஷ்ணு சித்தரின் மகளான கோதை, தமிழில் சொன்ன இப்பாடல்களைப் பாட வல்லவர்கள், எவ்வித குறையும் இன்றி இருப்பார்கள். முடிவில் வைகுந்தத்தை அடைவார்கள்.

Song 10

seethai vaai amudham uNdaai
..engal sitRil nee sidhaiyEl endru
veethi vaai viLaiyaadum aayar siRumiyar
..mazhalaich chollai
vEda vaai thozhilaaLargaL vaazh
..villiputthoor man vittu chitthan than
kOthai vaai thamizh vallavar
..kuRaivindri vaikundham sErvarE

This is the episode of small girls of aayarpadi, requesting the lord who is dear to Sita, not to destroy their small house made up of sand, narrated by kothai, in Tamil, the daughter of Vishnuchittan, who is as mightier as the King of Srivilliputthoor, where the learned persons chanting Veda live. Those who say these songs will be free from sins and attain the abode of Narayana (vaikuntam).

Monday, February 4, 2019

நாச்சியார் திருமொழி 2.9 - nAchiyAr tirumozhi 2.9

பாடல் 9

முற்றத்து ஊடு புகுந்து நின்
..முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும்
..சிதைக்கக் கடவையோ கோவிந்தா
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற
..நீண்டு அளந்து கொண்டாய் எம்மைப்
பற்றி மெய்ப்பிணக்கு இட்டக்கால்
..இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்

கோவிந்தா!, நாங்கள் சிற்றில் கட்டி விளையாடிக்கொண்டிருக்கும் எங்கள் வீட்டின் முற்றத்தினுள் நீ புகுந்து, உன் முகத்தைக் காட்டி, புன்முறுவல் செய்தாய். அவ்வாறு நீ செய்ததில் எங்கள் சிந்தை சிதைந்தது (எங்கள் வசம் அது இல்லை). நீ வந்து உதைத்ததில் எங்கள் சிற்றில் சிதைந்தது. அன்று, மாவலியிடம் மூன்று அடி மண் பெற்று, ஓரடியால் இந்த பூவுலகம் முழுவதையும் அளந்து, மற்றொரு அடியால் விண்ணுலகையும் அளந்தவனே! எங்களுக்கு, நீ ஒரு இக்கட்டினை உண்டாக்கினால், பெரியோர்கள் என்ன சொல்வார்கள்?

Song 9

mutRatthu oodu pugundhu nin
..mugam kaatti punmuRuval seithu
sitRilOdu engal sindhaiyum
..sidhaikkak kadavaiyO gOvindA
mutRa maNNidam thaavi viNNuRa
..neeNdu aLandhu koNdAi emmai
patRi meippiNakku ittakkaal
..indhap pakkam nindRavar en sollAr

Oh Govinda, you came to our home where we are building a sand house and are playing. You showed your face and smile to us. we lost ourselves in that. You physically damaged our small sand house and mentally damaged our minds. Oh the one who measured the Earth and the world above with the feet, if you create some embrassment to us, what will others say?

Sunday, February 3, 2019

நாச்சியார் திருமொழி 2.8 - nAchiyAr tirumozhi 2.8

பாடல் 8

வட்டவாய்ச் சிறுதூதையோடு
..சிறுசுளகும் மணலும் கொண்டு
இட்டமா விளையாடுவோங்களைச்
..சிற்றில் ஈடு அழித்து என்பயன்?
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய்
..சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்
கட்டியும் கைத்தால் இன்னாமை
..அறிதியே கடல் கண்ணனே

தூதை - பானை.

வட்டமான வாயுடைய சிறிய பானையைக் கையில் ஏந்தி, அதில் மணல், சிறு குச்சிகள் ஆகியவற்றை வைத்து, வீடு கட்டி விளையாடிக்கொண்டிருக்கும் எங்களது சிற்றில்லை களைப்பதினால் என்ன பயன்? அதனைத் தொட்டு, உதைத்து, எங்கள் மனத்தை இடித்துவிட வேண்டாம் கண்ணா! கையில் சுடர் விடும் சக்கரம் ஏந்தியவனே! கசந்த நெஞ்சத்தோடு நாங்கள் இருந்தால், எங்களுக்கு, கரும்புக்கட்டியும் ருசிக்காது என்பதை நீ அறிவாய் அல்லவா?

Song 8

vatta vaai siru thoothai yOdu
..siru suLagum maNalum koNdu
ittamaai viLaiyAduvOngaLai
..sitRil eedu azhitthu en payan?
thottu uthaitthu naliyEl kaNdAi
..sudar chakkaram kaiyil yEndhinAi
kattiyum kaitthal innaamai
..aRithiyE kadal kaNNanE

Oh Kanna! (kannane) the one who holds glittering disc (sudar chakkaram) on a hand (kaiyil yEndhinaai), we are playing a game that gives happieness to us (ittamaai viLaiyAduvongalai) by building sand house. We take sand (manal), twigs (suLagu) on a small pot (siru thoothai) that has a circular opening in the mouth (vatta vaai).

If you come and touch it with your feet and kick, we will become sad. Dont make us sad by destroying it (thottu uthaitthu naliyEl). There is no use in destroying it (sitril eedu azhitthu en payan?). You know that (arithiyE), even sugar cane or jaggery (kattiyum) wont taste good (kaitthaal innaamai), if our mind is unhappy.

Thursday, January 31, 2019

நாச்சியார் திருமொழி 2.7 - nAchiyAr tirumozhi 2.7

பாடல் 7

பேதம் நன்கு அறிவார்களோடு இவை
..பேசினால் பெரிதிஞ் சுவை
யாதும் ஒன்று அறியாத பிள்ளைகள்
..ஓமை நீ நலிந்து என் பயன்?
ஓத மாகடல் வண்ணா
..உன் மணவாட்டிமாரொடு சூழறும்
சேது பந்தம் திருத்தினாய் எங்கள்
..சிற்றில் வந்து சிதையேலே

பேதம் அறிந்தவர்களோடு, கண்ணா, நீ இந்த விளையாட்டைச் செய்தால், நன்கு சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால் எதுவுமே தெரியாத பிள்ளைகளான எங்களிடம் இவ்வாறு விளையாடி, எங்களைத் துன்புறுத்தினால், அதனால் ஆகும் பயன் என்ன? ஒன்றும் இல்லை.

மிகுந்த சத்தத்தோடு திகழ்கின்ற பெரிய கடலின் வண்ணம் கொண்ட பெருமானே, உன் மனைவிமார்கள் மீது ஆணையிடுகிறேன். எங்கள் சிற்றிலை வந்து சிதைக்காதே.

Song 7

bEdham nangu aRivaargaLOdu ivai
..pEsinaal perithum suvai
yaadhum ondRu aRiyAdha piLLaigaL
..Omai nee nalindhu en payan?
Odha mA kadal vaNNA
..un maNavAttimArodu soozharum
sEthu bandham thirutthinaai engaL
..sitRil vandhu sidhaiyElE

Oh Lord! If you do all your mischiefs with those who know about you, it will be of some thing interesting. But if you do your mischiefs to us, who knews nothing, what is the use in it? Absolutely nothing.

Oh the one who has the complexion as the mighty ocean that makes huge sound, we are placing an oath on your consorts. Please do not come and destroy our small sand houses.

Wednesday, January 30, 2019

நாச்சியார் திருமொழி 2.6 - nAchiyAr tirumozhi 2.6

பாடல் 6

முற்று இலாத பிள்ளைகளோம்
..முலை போந்திலாதோமை நாள்தொறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ
..சிறிது உண்டு திண்ணென நாம் அது
கற்றிலோம், கடலை அடைத்து
..அரக்கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய
..சேவகா! எம்மை வாதியேல்.

முற்று - முதுமை.

முதுமை அடையாத சிறு பிள்ளைகள் நாங்கள். எங்கள் முலைகளும் முழுதாக வளர்ச்சி அடையவில்லை. நாங்கள் நாள்தோறும் சிற்றில் கட்டி வருகிறோம். நீயும் தினமும் வந்து அதனைச் சிதைத்து, சேட்டை செய்கிறாய். எங்களுக்கு எதுவும் தெரியாது. அறியாத பிள்ளைகள் நாங்கள். நீயோ எல்லாம் அறிந்தவன். முன்பொரு காலத்தில், பிரட்டிக்காக, கடலில் அணை கட்டி, அரக்கர் குலத்தை முற்றிலுமாக அழித்து, இலங்கையையும் தீக்கிரையாக்கிய பெரியோன் நீ. எங்களை இனிமேலும் துன்பப்படுத்த வேண்டாம்.

Song 6

mutRu ilaatha piLLaigaLOm
..mulai pondhilaadhOmai naaLthoRum
sitRil mEl ittuk koNdu nee
..siRithu uNdu thiNNena naam adhu
katRilOm; kadalai adaitthu
..arakkar kulangaLai mutRavum
setRu ilangaiyaip poosal aakkiya
..sEvagaa emmai vaathiyEl

Oh the Lord, who knows everything and the one who built a dam across the ocean and fought against the enemies and burnt Lanka to ashes, please do not make us feel sad. We are small girls. Our breasts are still tender and we are yet to mature. We are just building houses daily and you keep on doing some mischeivous acts. We knew nothing other than you dear Lord.

Tuesday, January 29, 2019

நாச்சியார் திருமொழி 2.5 - nAchiyAr tirumozhi 2.5

பாடல் 5

வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில்
..விசித்திரப் பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம்
..அழித்தி யாகிலும் உன்றன்மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால்
..உரோடம் ஒன்றும் இலோம் கண்டாய்
கள்ள மாதவா கேசவா உன்
..முகத்தன கண்கள் அல்லவே

வெள்ளை நிறத்து நுண்ணிய மணல் கொண்டு, வீதியில், விசித்திரமாக நாங்கள் சிற்றிலைக் கட்டினோம். அந்த இல்லத்தை நீ அழித்தாலும், உன் மேல் கோபம் கொள்ள மாட்டோம். எங்களுக்குள் உருகி, அழுது, ஓடுவோமே தவிர, உன் மேல் ரோஷம் கொண்டு கோபித்துக்கொள்ள மாட்டோம். கள்ளனான மாதவனே, கேசவனே, நன்றாக இதைப் புரிந்து கொள். உன் முகத்தில் உள்ள கண்கள், கண்கள் அல்ல. இரும்பாகிய எங்களைக் கவர்ந்து இழுக்கும் காந்தம்.

Song 5

veLLai nuN maNal koNdu sitRil
..vichitthirap pada veedhi vaai
theLLi naangaL izhaittha koLam
..azhitthi yaagilum undRanmEl
uLLam Odi urugal allaal
..urOdam ondrum ilom kandaai
kaLLa mAdhavA kEsavA un
..mugatthana kaNgal allave

We built (theLLi naangaL izhaittha koLam) this small house (sitRil) using (koNdu) fine grained white sand (veLLai nuN maNal) in this street (veedhi vaai). If you destroy this (azhitthi yaagilum undRanmEl), still we will cry with in ourselves (uLLam Odi urugal allaal) and wont scold you out of anger (undRanmEl urOdam ondrum ilom kandaai). Please understand our feelings, Oh Madhava, Kesava (mAdhavA kEsavA), the one who stole our hearts (kaLLa). The eyes in your face is actually a magnet that attracts us. They are not eyes really.

Monday, January 28, 2019

நாச்சியார் திருமொழி 2.4 - nAchiyAr tirumozhi 2.4

பாடல் 4

பெய்யும் மாமுகில் போல் வண்ணா உன்றன்
..பேச்சும் செய்கையும் எங்களை
மையலேற்றி மயக்க உன்முகம்
..மாய மந்திரம் தான் கொலோ
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு என்னை
..நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய் எங்கள்
..சிற்றில் வந்து சிதையேலே

மழை நீரைத் தன்னிடம் வைத்துள்ள கார்மேகம் போன்ற நிறம் உடைய பெருமானே, உனது பேச்சும், செயலும் எங்களை மதி இழக்கச் செய்கின்றன. உனது முகமானது, மந்திரம் செய்து எங்களை மயங்கச் செய்கிறது. "அற்பமானவர்கள் நீங்கள்" என்று நீ சொல்லிவிடுவாயோ என்று எண்ணி, அதற்குப் பயந்து, நாங்கள் உன்னை ஒன்றும் சொல்லாமல் இருந்து வருகிறோம். சிவந்த தாமரையைப் போன்ற கண்களை உடையவனே, எங்கள் சிற்றிலை வந்து சிதைக்காதே.

Song 4

peyyu maamugil pol vaNNaa undran
..pEcchum seigaiyum engalai
maiyal yEtri mayakka un mugam
..maaya mandhiram thaan kolO
noyyar piLLaigaL enbatharkku unnai
..nOva naangal uraikkilOm
seyya thaamaraik kaNNinaai engal
..sitril vandhu sidhaiyElE

Oh! the one who is as dark as the clouds bearing water in it (peyyu maa mugil pol vannaa), your (undran) words (pEcchum) and action (seigaiyum) are mesmerizing us (engalai maiyal yEtri). Your face (un mugam) is casting spell on us (maaya mandhiram) and we are bound to it (mayakka). We fear that you might say, "You girls do not have mature minds" (noyyar piLLaigaL) and because of that fear, we are restraining ourselves from saying something that might hurt you (unnai nOva naangal uraikkilOm), Oh the lord who has eyes as red as  lotus (seyya thaamarai kanninaa). Please do not come and destroy our sand house.

Saturday, January 26, 2019

நாச்சியார் திருமொழி 2.3 - nAchiyAr tirumozhi 2.3

பாடல் 3

குண்டு நீர் உறை கோளரீ மதயானை
..கோள் விடுத்தாய் உன்னைக்
கண்டு மால் உறுவோங்களைக்
..கடைக் கண்களால் இட்டு வாதியேல்
வண்டல் நுண்மணல் தெள்ளி யாம்
..வளைக் கைகளால் சிரமப் பட்டோம்
தெண்டிரைக்கடல் பள்ளியாய் எங்கள்
..சிற்றில் வந்து சிதையேலே

ஆழம் மிக உடையதும் நீரை உடையதுமான தடாகத்தில் வாழும் சிங்கம் போன்ற கம்பீரமான யானையின் (கஜேந்திரன்) துயரத்தை (கோள்) அழித்தவனே! உன்னைப் பார்த்து மிகவும் ஆசைப்படும் (மால் - ஆசை; உறுதல் - கொள்ளுதல்) எங்களை, உன் கடைக்கண்களால் பார்த்து, இன்னும் வாட்டப்படுத்த வேண்டாம். வண்டல் நிறைந்த நுண்ணிய மணல் கொண்டு, இன்று, எங்கள் வளைகள் அணிந்த கைகளால் மிகவும் சிரமப்பட்டு வீடு கட்டியுள்ளோம். தெளிந்த அலைகள் நிறைந்த கடலில் (தெண்டிரை - தெள் + திரை) பள்ளிகொள்பவனே, எங்கள் சிற்றிலை வந்து சிதைக்க வேண்டாம்.

Song 3

kuNdu neer uRai kOLaree madha yaanai
..koL vidutthaai unnaik
kaNdu maal uRuvOngaLaik
..kadaik kaNgaLaal ittu vaadhiyEl
vaNdal nuN maNal theLLi yaam
..vaLaik kaigaLaal siramap pattOm
theNdiraik kadal paLLiyaai engaL
..sitRil vandhu sidhaiyElE

Oh the one, who removed the sorrows of the majestic elephant (Gajendra) [koL aree madha yaanai], who lived in a pond that has lot of water in it (kundu neer urai), please do not make us to feel a lot, by glancing with your beautiful eyes (kadaik kangalaal ittu vaadhiyel). We had a difficult time by building the sand house with our hands wearing bangles (vaLaik kaigaLaal siramap pattOm). Oh Lord, who resides in the ocean with clear waves (theNdiraikkadal - theL thirai kadal), please do not destroy our sand house.

Thursday, January 24, 2019

நாச்சியார் திருமொழி 2.2 - nAchiyAr tirumozhi 2.2

பாடல் 2

இன்று முற்றும் முதுகு நோவ
..இருந்து இழைத்த இச்சிற்றிலை
நன்றும் கண்ணுற நோக்கி நாம் கொளும்
..ஆர்வம் தன்னைத் தணிகிடாய்
அன்று பாலகனாகி ஆலிலைமேல்
..துயின்ற எம் ஆதியாய்
என்றும் உன்றனக்கு எங்கள்மேல்
..இரக்கம் எழாதது எம் பாவமே

இந்தப் பாடலில், இறைவனுக்கு, நம் மேல் இரக்கம் வரவில்லை என்றால், அது நாம் செய்த பாவமே என்று மிக அடக்கத்தோடு கூறுகிறாள் ஆண்டாள்.

இன்று முழுவதும், குனிந்து, நிமிர்ந்து, முதுகு நோக, மணல் வீடு கட்டினோம் நாங்கள். நீ இங்கே வந்து, கண் குளிரப் பார்த்து எங்களது மனத்தினை மகிழ்வடைய செய்ய வேண்டும் பெருமானே. முன்பொருநாள், ஊழிக்காலத்தில், ஆலிலையில் துயின்ற ஆதியே! என்றும் எங்கள் மேல் இரக்கம் உனக்கு வராதது (அதாவது எங்கள் சிற்றிலைக் காண வராதது), நாங்கள் செய்த பாவமே. வேறென்ன சொல்வது? என்று பாடுகிறாள்.

Song 2

indru mutrum mudhugu nOva
..irundhu izhaittha ichchitrilai
nandrum kannura nOkki naam koLum
..aarvam thannaith thaNigidaai
andru baalaganaagi aalilai mel
..thuyindra em aadhiyaai
endrum undranukku engal mel
..irakkam ezhaathathu em paavame

We, the girls have spent the whole day (indru mutrum) in building this sand house (irundhu izhaittha ichchitrilai), with lot of difficulties (mudhugu nOva). Oh Lord, the one who slept on the banyan leaf (baalaganaagi aalilai mel thuyindra em aadhiyaai), during the time of deluge (andru), please come and see our house. If you come and see it then we are said to be blessed. If you don't come to see it, then it is all only because of our fault or the sins committed by us (endrum undranukku engal mel irakkam ezhaathathu em paavame).

Tuesday, January 22, 2019

நாச்சியார் திருமொழி 2.1 - nAchiyAr tirumozhi 2.1

திருமொழி 2

பாடல் 1

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற
..நாராயணா நரனே உன்னை
மாமி தன் மகனாகப் பெற்றால்
..எமக்கு வாதை தவிருமே
காமன் போதரு காலம் என்று
..பங்குனிநாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா
..எங்கள் சிற்றில்வந்து சிதையேலே

இந்தப் பாடலில், ஆண்டாள், இறைவனை, "நீ வர வேண்டாம். வந்து எங்கள் சிற்றில்லைச் சிதைக்க வேண்டாம்" என்று சொல்லி, அதன் மூலம் இறைவன் வரவேண்டும் என்ற தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறாள். நமக்கு ஒருவரிடம் ப்ரியம் இருந்தால், அவரிடம், "நீங்கள் எல்லாம் என் வீட்டிற்கு வர மாட்டீர்கள்" என்று சொல்லுவோம் அல்லவா? அது போலவே இப்பாடலும்.

ஆயிரம் பெயர்கள் கொண்டவனான நாராயணனே, மனிதனாக இப்பூவலகில் அவதரித்தவனே (ராம, கிருஷ்ண அவதாரங்கள்), உன்னை எங்களது மாமியின் மகனாகப் பெற்றால் (கணவன்) எங்களது துன்பங்கள் தீர்ந்துவிடப் போகிறதா என்ன? மன்மதன் வரும் நேரம் என்பதால், நாங்கள் இந்தப் பங்குனி நாளில், சிற்றில் கட்டி, அலங்கரித்து வைத்துள்ளோம். ஸ்ரீதரனே (சிரீதரா), எங்களிடம் வந்து விளையாடி, நாங்கள் ஆசையாக கட்டிய மணல் வீடுகளைச் சிதைக்க வேண்டாம்.

சிறுமியர்கள், மணலில் கட்டும் வீடு - சிற்றில் எனப்படும். சிறு + இல் = சிற்றில்.

Tirumozhi 2

Song 1

naamam aayiram yEttha nindra
..nArAyanA naranE unnai
maami than maganaaga petrAl
..emakku vaadhai thavirume
kaaman potharu kaalam endru
..panguni naal kadai paaritthom
theemai seiyum sireedharaa
..engaL sitRil vandhu sithaiyElE

In this song, Anadal asks the Lord not to come and destroy their play houses built of sand. This type of songs are called as nindhA sthuthi. That is by the way of scolding one, we are actually praising them. If we like a person, we want them to come to our home. But we will normally say, "you wont be coming to our home and all". That expression shows that we are longing for their arrival.

Oh Narayana, the one who has thousand names (naamam aayiram), the one who descended to this world as a man [naranE] (rama, krishna), if we get you as our beloved (aunt's son) [maami than maganaaga petrAl], will our sorrows evade? (emakku vaadhai thavirume)

We are awaiting for Manmadhan (kaaman potharu kaalam endru) on this month of panguni (panguni naal kadai paaritthom). So for him, we have built this houses and decorated it. You need not have to come and destroy these houses.